கடக்க வேண்டிய பாதை
தவ்ஹீத்வாதிகள்
கடக்க வேண்டிய பாதை
கழிக்க வேண்டிய சிந்தனை
***********
கட்டுரை எண் 1402
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
கடந்து வந்த பாதை தரும் வெற்றியை விட கடக்க வேண்டிய பாதையை நோக்கிய சிந்தனையே மனித வாழ்வை செவ்வை படுத்தும்
குர்ஆன் ஹதீஸ் என்பது மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உறுதியாக நம்பும் சகோதரர்களும் கூட பல விதமான பிரிவுகளுக்கு காரணிகளாக மாறிவிட்டதின் காரணம் என்ன ?
இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்சி தேவை இல்லை
எதை தவறு என்று புரிந்து அசத்திய வழிகளில் இருந்து வெளியேறினோமோ அதே தவறை பெயர் மாற்றி நம்மில் குடி வைத்திருக்கும் வரை நிச்சயம் வழிகேடுகளே நம்மை துரத்தும்
இயக்க பற்று என்பதை தாண்டி இயக்க வெறியும் தனி மனித பக்தியும் தனிமனித வெறுப்பும் பதவி மோகமும் பொருளாதார ஆசையும் தான் ஏகத்துவத்தை தழுவியுள்ள மக்களை இப்போதும் வழிகெடுத்து கொண்டுள்ளது
எந்த சிந்தனைகள் ஏகத்துவ சிந்தனையுடைய மக்களை மிக எளிமையாக வழிகெடுக்குமோ அந்த சிந்தனைகளுக்கு ஊக்கம் தரும் விதம் செயல் படுவதும் அசத்தியத்தை எதிர்த்து குரல் கொடுப்பதாக நினைத்து கொண்டு தலைவர்கள் போடும் அதிகார சண்டைகளுக்கு தூபம் போடுவதும் தூக்கி சுற்றுவதும் வழிகேடுகளின் வாசல்களை மீண்டும் திறப்பதற்கான மூல காரணம்
குர்ஆன் ஹதீசை யார் தெளிவாக எடுத்து கூறினாலும் அதை ஏற்ப்போம் என்று சிந்தனைய மட்டுமே வளர்த்தி கொள்ளுங்கள்
மார்க்கம் அல்லாத எந்த ஒன்றுக்கும் உங்கள் நேரத்தை பொருளாதாரத்தை உழைப்பை செலுத்தாதீர்கள்
இயக்க ரீதியான குற்றச்சாட்டுகளையும் தனிமனித விமர்சனங்களையும் விளக்கிட அல்லது மறுத்திட யார் உங்களை அழைத்தாலும் அதில் கவனம் செலுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்
இவைகளில் கவனம் செலுத்தும் வரை உங்களை வைத்து இன்னும் பல இயக்கங்கள் உருவாகவே செய்யும்
எதற்கெடுத்தாலும் இயக்கங்களை குறை கூறி தன்னை சுத்தவானாக காட்டி கொள்வதும்
தமிழகத்தில் இருக்கும் அனைத்து இயக்கங்களிலும் நுழைந்து விட்டு இறுதியாக அவைகளின் இருந்து வெளியேறியோ அல்லது வெளியேற்றப்பட்ட பின்போ தூய்மை சிந்தனையை பேசும் நாடகத்தையும் கைகழுவுங்கள்
இந்த தெளிவான சிந்தனை கொண்ட மக்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு
இத்தகையவர்கள் தான் ஏகத்துவ சிந்தனை உருவானதில் இருந்து இன்று வரை எந்த பித்னாவிலும் தங்களை அங்கமாக்காது ஈமானிய வழியை நோக்கியே விளம்பரமின்றி தூய வழியில் பயணிக்கின்றனர்
கடந்த கால பாதையை சிந்திப்பதை விட
கழித்து தள்ள வேண்டிய தீயகுணங்களை மறுமைக்கு உதவாத தலையீடுகளை தவிர்த்து கடக்க வேண்டிய பாதையை செவ்வை செய்து முஸ்லிமாக மட்டுமே பயணியுங்கள் அதுவே நம்மில் மலர்சியை மெருகூட்டும்
فَرِيْقًا هَدٰى وَ فَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது
ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள்
எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்
(அல்குர்ஆன் : 7:30)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment