கடமை மறந்த முஸ்லிம்கள்
கடமை மறந்த முஸ்லிம்கள்
***********
கட்டுரை எண் 1401
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல
மாறாக ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் உரியது
அத்தகைய மார்க்கத்தை பரம்பரை பாக்கியமாக பெற்றுள்ள முஸ்லிம்கள் தனது
வாழ்நாளில் இந்த மார்க்கத்தை ஒரே ஒரு முஸ்லிம் அல்லாதவரை சந்தித்து எடுத்து சொல்லி உள்ளார்களா ? என்று எண்ணி பாருங்கள்
நிச்சயம் உங்கள் மீது உங்களுக்கே வெறுப்பு ஏற்படும்
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாக விமர்சனம் செய்கிறார்களே என்று வருத்தம் கொள்ளும் முஸ்லிம்கள்
அந்த மக்களில் எத்தனை நபருக்கு இஸ்லாத்தை முறையாக எடுத்து வைத்துள்ளனர்
முஸ்லிம் அல்லாதவர்களை பொருத்தவரை அவர்களுக்கு முழு இஸ்லாத்தையும் நாம் கற்று கொடுக்க தேவையில்லை
மாறாக அவர்களின் சிந்தனை வாசலை திறப்பதற்கு நயமான சில வார்த்தைகளை நினைவு படுத்தினால் கூட போதுமானது
சமூகவலைதளத்தில் அங்கம் வகித்து கொண்டு அன்றாடம் தேடி வரும் செய்திகளை பயான் வீடியோக்களை சேர் செய்வதால் அல்லது பொதுவான சில அறவுரை அறிவிப்புகளை போடுவதால் தஃவா ( அழைப்பு பணியை) நிறைவேற்றுவதாக கருதுவது முஸ்லிம்கள் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் செயலாகும்
அழைப்புபணியில் ஈடுபடுவதின் மூலம் ஏற்படும் எந்த இழப்புகளும் சிரமங்களும் விளைவுகளும் சமூகவலைதளத்தின் மூலம் மார்க்கம் பரப்பும் எவருக்கும் ஏற்படாது
மார்க்கத்தை எடுத்து சொல்வது மார்க்க அறிஞர்களுக்கு மட்டும் இஸ்லாம் சுமத்திய கடமை அல்ல
மாறாக இஸ்லாத்தை ஏற்றுள்ள ஒவ்வொருவரின் மீதும் இறைவன் சுமத்தியுள்ள கடமை தான் அழைப்பு பணி
புதிதாக இஸ்லாத்தை ஏற்று வரும் மக்கள் கூறும் குற்றச்சாட்டு மூன்று
1 இத்தனை காலம் எந்த முஸ்லிமும் எனக்கு இஸ்லாத்தை நேரடியாக எத்தி வைத்தது இல்லை
2 பாக்கியம் நிறைந்த இஸ்லாத்தை முஸ்லிம்களே இயன்றவரை சரியாக கடைபிடிப்பது இல்லை
3 இஸ்லாத்தை பற்றி முஸ்லிம்களிடம் கேட்டால் அவர்களுக்கே இஸ்லாமிய சட்டங்கள் தெரிவது இல்லை
இதை உணர்ந்து நம்மால் இயன்ற பணிகளை சமூகத்தில் களமிறங்கி பணியாற்றுவோம்
وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர் அல்லாஹ் எவர்களை அழிக்கவோ அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள்
அதற்கு (அந்த நல்லடியார்கள்) எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்
(அல்குர்ஆன் : 7:164)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment