கொரோனா பரவல்
உண்மையை தாமதமாக ஏற்ற
உலக சுகாதார அமைப்பு
********
09-07-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1338
••••••••••••••••••••••••••••
ஒரு நோயை பற்றி உலகம் எந்த கோணத்தில் அணுகுகிறதோ அதே கோணத்தில் தான் மனிதனின் மனம் அதை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்
அந்த புரிதலின் விளைவாக அறிவுக்கு மாற்றமான அறிவியலுக்கு மாற்றமான செய்கைகளை கூட மறுத்து பேசுவதற்கு தயங்கி கொண்டிருப்பான்
பெரும்பான்மை கருத்துடையோர் எதை கூறுகிறார்களோ அதற்கு மாற்றமாகவும் மறுப்பாகவும் எதிராகவும் பேசும் போது நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற எண்ணம் சத்தியத்தை நம்மில் வலுவிழக்க செய்து விடும்
கொரோனா தொற்று நோயை பொருத்தவரை எந்த வழிகளில் பரவும் என்று ஊடகங்களில் மாத கணக்கில் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறதோ அதை விட காற்றின் மூலமாக அந்த தொற்று நோய் அதிகம் பரவியுள்ளது என்பது தான் உலக நடைமுறை விளைவுகளை சிந்திப்போரால் அறிய முடியும்
இதை பல உவமைகளை காட்டி பல பதிவுகளில் நாம் விளக்கி இருந்தாலும் அந்த கூற்று உண்மை என்பதை தற்போது தான் உலக சுகாதார அமைப்பு மெய்படுத்தி உள்ளது
9:07:2020 வெளியாகியுள்ள தினத்தந்தி நாளிதழ் கூட இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
காற்றின் மூலமும் கொரோனா தொற்று நோய் பரவும் என்று சொன்னால் 24 மணிநேரமும் முகத்தில் மாஸ்க் அணிந்து தான் வலம் வர வேண்டும்
அவ்வாறு 24 மணி நேரமும் மாஸ்க் அணியும் பொழுது அது நம் இயற்கை சுவாசத்திற்கு இடையூறு தரும் என்பதை ஒவ்வொருவராலும் அறிய முடியும்
இடைவெளியை பேணி கூட்டங்களில் அமர்ந்தாலும் காற்றின் மூலம் பரவும் தொற்றை எந்த சட்டங்களாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது
ஒவ்வொரு மனிதனும் தனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகளை உண்ணுவதை தவிர இதற்கு தற்போதைய சூழலில் வேறு எந்த வழியும் இல்லை
தடுப்பூசி கண்டறியப்படுவது தான் இதற்கு மன ஆறுதல் தரும் செய்தியாக மாறும்
இவ்விசயத்தில் உண்மையை தாமதமாக ஒப்பு கொண்ட உலக சுகாதார அமைப்பினர்
இந்த தொற்று நோயை முன்னிட்டு அரசாங்கம் குடிமக்களுக்கு போட்டுள்ள பயனற்ற தடைகளை நீக்கிட பரிந்துறை செய்ய வேண்டும்
அரசாங்கமும் மக்களின் பொருளாதாரத்தை நசுக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டின் வளத்தை தூக்கி நிறுத்திட வழிவகை செய்ய வேண்டும்
யாவற்றுக்கும் மேல் இறைவனிடம் மன்றாடி கையேந்துவதை தவிர உலக மக்களுக்கு மாற்று வழி ஏதும் இல்லை
இந்த தகவலை விழிப்புணர்வு கருதி பிற மக்களுக்கு எத்தி வைக்கவும்
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـــٴُـوْسًا
நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்
அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்
(அல்குர்ஆன் : 17:83)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment