கொரோனா வெளிப்படுத்திய நிஜம்
கொரோனா வெளியாக்கும்
நிறங்களும் நிஜங்களும்
********
02-07-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1337
••••••••••••••••••••••••••••
கொரோனா பாதிப்பால்
வருமானத்திற்கு வழி இல்லையே என்ற வருத்தம் பலருக்கு
சேமானம் தேய்மானம் ஆகிறதே என்ற வருத்தம் சிலருக்கு
இன்னும் சில வருடம் கழிந்தாலும் நமக்கு கவலை இல்லையே என்ற சுயநலம் சிலருக்கு
இதிலும் பொதுநலம் சிந்தித்து மறுமை நலன் அடைய முடிகிறதே என்ற ஆனந்தம் சிலருக்கு
மனிதனில் இத்தனை நிறங்களா உறவுகளில் இத்தனை நிழல்களா என்ற மெய்யை நிலைநாட்டிய பெறுமையோ கொரோனாவுக்கு
ஒரு மனிதனுக்கு இறைவன் தீர்மானித்த இறுதி குழாய் உணவு உடலில் இறங்காது எந்த நோயும் எதையும் சாதிக்காது என்பதே உறுதி வாய்ந்த உண்மை
சோதனைகளை ஏற்படுத்துவதின் மூலம் சில மனிதர்களின் சகிப்பு தன்மையையும்
சில மனிதர்களின் தியாகத்தன்மையையும்
சில மனிதர்களின் சுயநல தன்மையையும்
சில மனிதர்களின் கன்ஜத்தனத்தையும்
சில மனிதர்களின் கயமைத்தனத்தையும்
இறைவன் பரிசீலிக்கிறான் என்பது மட்டுமே ஈமானிய சிந்தனைக்கு தற்போது தேவையானது
وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِ يَعْلَمُ سِرَّكُمْ وَ جَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُوْنَ
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்
இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்
(அல்குர்ஆன் : 6:3)
اِنِّىْ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ رَبِّىْ وَرَبِّكُمْ مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ بِنَاصِيَتِهَا اِنَّ رَبِّىْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
நிச்சயமாக நான் எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன் எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்
நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்
(அல்குர்ஆன் : 11:56)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment