கொரோனாவும் பகுத்தறிவும்

      கொரோனாவும் பகுத்தறிவும்

                          ********
                     13-07-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1339
             ••••••••••••••••••••••••••••
உலகம் முழுதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு 120 நாட்கள் கடந்து விட்டது

எது போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று நோயை தடுக்க முடியும் என்று கடுமையான சட்டங்களை போட்டார்களோ அந்த சட்டங்கள் மூலம் பெரிய அளவில்  வெற்றியை பெறவில்லை என்பதை நிகழ்வுகளை உற்று நோக்கும்  சாதாரணமாக சிந்திக்கும் மனிதனாலும் தெளிவாக உணர முடியும்

கடுமையான சட்டங்களும் கொரோனாவை ஒட்டி பரப்பப்பட்ட தகவல்களும் தான் பெரியளவில் மனிதனின் மனதை பாதித்ததே உலகில்  பொருளியல் பாரத்தை கூட்டியதே தவிர கொரோனாவால் மனித சமூகத்திற்கு  ஏற்பட்ட பாதிப்பு  மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை

முறையான இறைநம்பிக்கையும் அறிவுப்பூர்வமான நடவடிக்கையும் கொண்ட ஆட்சியாளர்கள் உலகில் இருந்திருந்தால் இந்தளவுக்கு உலகம் உலவியல் தாக்கத்தை சரிவை  சந்தித்து இருக்காது

ஒரு விசயத்தை அரசு சொல்கிறது என்பதற்காகவும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என்பதற்காகவும் அதை வேதாகமாக தூக்கி சுற்றினால் அதன் விளைவுகள் கடுமையான பாதிப்பையும்  ஏற்படுத்த கூடும்  என்பதை இனியாவது உலகம் உணர வேண்டும்

மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவை விட சிறந்த ஒரு பொக்கிசத்தை சிறந்த ஆசானை சிறந்த நீதிபதியை இனியும் மனிதனால் கண்டறிய முடியாது

32 நாடுகளின் விஞ்ஞானிகள்  இணைந்து தற்போது உலக சுகாதார அமைப்பிடம் கொரோனா பரவலை முன்னிட்டு  கையொப்பமிட்டு கூறிய சில உண்மைகளை ஒட்டி இனிமேல் WHO நிறுவனம்  தரும் மாற்று ஆலோசனைகள் தான் இதன் உண்மையை நிலை நாட்ட கூடும்

ஆனால் அங்கும் (WHO) சீரற்ற சிந்தனை உடையோர் இருக்கும் பட்சத்தில்  இன்னும் உலகம் பல சரிவுகளை மூடத்தனத்தை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்