கொரோனா ராஜ்யம்

          கொரோனா ராஜ்யம்
                       ********
                     01-07-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1337
             ••••••••••••••••••••••••••••

அதிரடி நடவடிக்கைகள் தான் சில ஆபத்துகளை தடுத்து நிறுத்தும்

அது போன்ற வாய்ப்புகளை தவற விட்ட பிறகு எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் விளையும் ஆபத்துகளை தடுக்க பயன்படாது என்பதை ஒட்டு மொத்த உலகிற்கு பாடம் நடத்தியுள்ளது கொரோனா வைரஸ்

உலகளவில் எடுக்கப்பட்ட பல கட்ட நடவடிக்கைகளும் தோல்வியை தழுவியதும் இதனால் தான்

தற்போது அறிவிக்கப்படும் நவீன அறிவிப்புகளும் இதை தான் தொடர்ந்து  கற்று தர போகிறது

ஞாயிற்றுக்கிழமை கூடும் மக்கள் கூட்டத்தை தடை செய்யும் பொழுது அந்த நாளில் சேரும் கூட்டம் அதற்கு முன் தினம்  சனிக்கிழமை கூட தான் போகிறது

பணியின் நேரத்தை குறைக்கும் பொழுது வாய்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் அதே கூட்டம் கூடத்தான் போகிறது

இதில் என்ன மாற்றம் என்ன நன்மை ஏற்பட போகிறது என்பதை சிந்தித்தாலும் புரிய முடியவில்லை

எதுவானாலும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற சிந்தனையில் தான் மக்களும் தனது மனநிலையை தர்ம சங்கடத்துடன்  மாற்றி கொண்டனர்

அரசு மக்களை ஆளும் நிலை மாறி தற்போது கொரோனா தான் அரசை ராஜ்யம் செய்கிறது

இறைவனிடம் மனம் உறுகி திருந்தி கையேந்துவதை தவிர கொரோனா பாதிப்பை விரட்டுவதை தவிர வேறு ஒரு வழியும் தற்போது இல்லை

يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ ‌ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ‏ 

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான்

அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது

            (அல்குர்ஆன் : 13:39)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்