ஆய்வாளர் பேச்சாளர் வேறுபாடு
ஆய்வாளர் பேச்சாளர்
வேறுபாடு
********
29-06-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1336
••••••••••••••••••••••••••••
பேச்சாளருக்கும் ஆய்வாளருக்கும் உள்ள வேறுபாட்டை சரியாக முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும்
ஒருவர் அழகிய தோற்றத்தில் மேடையில் கம்பீரமாக பேசுவதால் நகைச்சுவையாக பேசுவதால் ராகமிட்டு பேசுவதால் குர்ஆன் வசனங்களை தெளிவாக மொழிவதால் அவரை இஸ்லாமிய ஆய்வாளர் என்று முடிவு செய்ய கூடாது
இஸ்லாமிய ஆய்வாளர்களுக்கு மேடைகளில் முழங்கும் திறமை இல்லாதும் கூட இருக்கலாம்
ஆனால் அவர்களின் ஆய்வுகள் அவர்களுக்குள் இருக்கும் தனிதிறமையை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தி காட்டும்
அதே நேரம் மேடை பேச்சாளர்கள் இஸ்லாமிய அடிப்படை அறிவு மற்றும் ஆய்வு தன்மை இல்லாத நிலையில் இருந்து கொண்டே அவரது மேடை பேச்சில் ஏதோ மார்க்கத்தில் ஆய்வில் கரைபுரண்டவர் போலே தனது தோற்றத்தை வெளிக்காட்டி கொள்ள முடியும்
இதன் காரணமாகத்தான் பல பித்அத்துகளும் உணர்சியை தூண்டி கட்டமைக்கப்பட்ட சில அமைப்புகளும் சமூகத்தில் நுழைக்கப்பட்டு விட்டது
மேடைகளில் வீரமாக பேச்சை அமைக்க வேண்டும் என்பதற்காக கற்பனைகளையும் செவிசாய்ப்போர் நேரடியாக உரசி பார்க்க முடியாத செய்திகளையும் முழங்கும் சிலர்கள் மார்க்க அறிஞர்களாக தாஃயிக்களாக வலம் வந்து கொண்டிருப்பதை காண முடிகிறது
மக்கள் மன்றத்தில் வீரமாக எடுத்து வைக்கப்படும் விசயங்களை ஒட்டி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கும் மறுப்புகளுக்கும் சம்மந்தப்பட்டவர் விளக்கம் கூற தயங்கினால்
அல்லது எதிர் கருத்தை ஜீரணிக்க தயங்கினால் அல்லது அதன் மூலம் மக்களை குழப்பினால் அதை வைத்தே அவர் மேடை பேச்சாளர் என்பதை தெளிவாக சிந்தனையாளர்களால் உணர்ந்து கொள்ள முடியும்
மக்கள் ஏமாறுவதை போல் ஆய்வாளர்களும் ஏமாறுவார்கள் என்று நினைப்பது தான் இத்தகையவர்களின் அறிவீனம்
இறைவனின் பேரருளால் சமூகத்தில் சிலர்கள் ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விவாத கலை தெரிந்தோராகவும் அழகான தன்மையுடையோராகவும் இருப்பதை மறுக்க இயலாது
அது போன்றவர்கள் தான் சமூக சூழ்நிலைக்கு ஏற்று மக்களுக்கு சொல்ல வேண்டிய அறவுரைகளை கண்டனங்களை விழிப்புணர்வுகளை தயக்கம் இன்றி எச்சூழலிலும் எடுத்து வைத்து வருகின்றனர்
பாமரர்கள் இவ்விசயத்தில் கவனம் பேண வேண்டும்
காரணம் பாமரர்கள் தான் இது போன்றவர்களை நம்பி பல நேரங்களில் ஏமாந்துள்ளனர்
اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்
இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள்
ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்
(அல்குர்ஆன் : 24:15)
يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்
(அல்குர்ஆன் : 24:24)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment