சாபத்தை சுமக்கும் இனங்கள்

     சாபத்தை சுமக்கும் இனங்கள்

                          ********
                     27-06-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1335
             ••••••••••••••••••••••••••••
நாட்டில் எது போன்ற சிக்கல்கள் இழப்புகள் ஏற்பட்டாலும் அவைகளில் பங்கு கொண்டு பணியாற்றுவதோடு அதற்கான ஊதியத்தையும்  நீண்ட கால  சலுகையும் பெறுவது அரசாங்க ஊழியர்கள் தான்

இந்தளவுக்கு சலுகைகளை அரசாங்க ஊழியர்கள் பெறுவதற்கு ஒரே காரணம் தங்களின் சிக்கலை காரணம் காட்டி நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அவர்கள்  செய்யாமல் இருக்க கூடாது என்பதற்காகவும் நாட்டுக்காக உழைக்கும் அவர்கள் நாட்டு மக்களிடம் எதையும் எதிர்பார்த்து செய்ய  கூடாது என்பதற்காக தான்

ஆனால் இவ்வளவு வசதிகளையும் அனுபவித்து கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதும் அவர்க ஏற்று கொண்ட பணியை செய்வதற்கு செய்யாமல் இருப்பதற்கும் லஞ்சம் வாங்கும் ஈனத்தனமான புத்தியும் அரசாங்க ஊழியர்களிடம் தான் அதிகமதிகம் காணப்படுகிறது

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏற்று நடக்கும் ஒரே இனம் இவர்கள் மட்டுமே

இதனால் மக்களின் கோபத்திற்கும் பாதிக்கப்பட்டோரின் சாபத்திற்கும் இவர்களே அதிகம் உள்ளாகின்றனர்

குடும்பத்தில் நிம்மதி இழப்பு விவாகரத்துகள்  வாழ்நாளில் சந்திக்கும் கடுமையான நோய்கள் ஊனங்கள் என்று பல பாதிப்புகளை சுமப்பவர்களில் சதவிகிதத்தில் இவர்களே அதிகம்

அரசன் அன்று கொள்வான்
கடவுள் நின்று கொள்வான்

என்ற ஆன்மீக நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையராக்கள் இவர்களே

பண மோகத்தை குறைக்காது இவர்களை எவராலும் திருத்த முடியாது

பாதிக்கப்பட்டவர்கள் தவறான வழியை தேர்வு செய்வதற்கும் இந்த நபர்களே மூல காரணம்

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌  اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏ 


மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்

          (அல்குர்ஆன் : 14:42)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்