பகுத்தறிவு தோற்றுப்போனது
தோற்றுப்போன பகுத்தறிவு
********
21-06-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1334
••••••••••••••••••••••••••••
சோதனைகளை மனிதன் சாதனைகளால் வெல்ல இயலாது என்பதை தான் தற்போது கொரோனா பாதிப்பு நிருபித்து விட்டது
எது வந்தாலும் நாங்கள் எதிர் கொள்ளும் வலிமையை பெற்றுள்ளோம் என்று ஆணவத்தால் ஆடிய மேலைநாடுகளும் கொரோனாவுக்கு அடங்கியதும் இதற்கு சரியான சான்று
வலிமை குறைந்த பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருப்பதும் இதற்கு சரியான சான்று
சமூகவிலகலை கடைபிடிப்பதின் மூலமாகவும் மாஸ்கை அணிவதின் மூலமாகவும் தான் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க முடியும் என்ற தற்காப்பை உலக மக்கள் பேணி வரும் சூழலிலும் கொரோனா தடுப்பு மாஸ்கையும் மீறி தனது கோர சாதனையை நிலை நாட்டி வருகிறது கொரோனா
காற்றின் மூலமாகவும் கொரோனா பரவும் சூழல் உள்ளது என்ற சில ஆய்வாளர்களின் கூற்றும் மறுக்க இயலாத ஒன்றாக தற்போதைய நிலை அமைந்துள்ளது
ஏசியிலும் தூசி படியாத அறைகளிலும் தங்கி இருப்போர் கொரோனாவில் பாதிக்கப்பட்ட அளவுக்கு ரோடு ஓரங்களிலும் மாசு படிந்த குட்டியான இல்லங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை கொரோனா தாக்கியது குறைவு என்பது தான் மனிதனின் பகுத்தறிவுக்கு மாற்றமாக நடைபெற்று வரும் எதார்த்த உண்மை
மனிதனின் வல்லமை அறிவியல் முன்னேற்றம் யாவற்றையும் மீறிய ஒரு ஆற்றல் உண்டு என்பதை இனியும் இறைமறுப்பாளர்கள் புரிய தவறினால் அவர்களை விட அறிவிலிகள் எவரும் இல்லை
அறிவை இழக்கும் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கி விட்டு அறிவை படைத்த இறைவனின் சந்நதி என்று மக்கள் கருதும் வழிபாட்டு தலங்களுக்கு பூட்டுக்களை மாட்டியது தான் சாபக்கேடு
அதன் விளைவே தற்போது தமிழக முதல்வர் அவர்கள் கொரோனா எப்போது ஒழியும் என்று இறைவனுக்கு தான் தெரியும் என்று இயலாமையை பேட்டியாக வெளிப்படுத்தி விட்டார்
தமிழக முதல்வரின் இந்த பேட்டி குறை கூற வேண்டிய பேட்டி அல்ல
மாறாக ஆட்சியாளர்கள் இப்போது தான் சர்வ ஆட்சியாளன் இறைவனை உணர துவங்கியுள்ளனர் என்பதையே உணர முடிகிறது
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ فَلَا يَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 7:99)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment