சமூகவலைதள சாக்கடைகள்

    சமூகவலைத்தள சாக்கடைகள்

                         ********
                     19-06-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
          

எளிமையாக கிடைக்கும் எந்த ஒன்றையும் மனிதன் பயனுள்ள விதத்தில் பயன்படுத்த மாட்டான் என்பதற்கு மிக பெரிய சான்றே சமூகவலைதளம்

டைம் பாஸ் என்பதை தவிர வேறு எந்த முன்னேற்றமும் பலரது பதிவுகள் வெளிப்படுத்துவது இல்லை

தனிமையில் இருந்து பேசுவதற்கே கூச்சப்படுகின்ற வார்த்தைகளை கேவலமாக கருதுகின்ற வார்த்தைகளை கொச்சை வார்த்தைகளை சர்வசாதாரணமாக பலரது பதிவுகளில் காண முடிகிறது

தவறான செய்திகளை ஆராயாது பதிவு செய்து விட்டு அதை பிறர்கள் நியாயமாக  சுட்டிக்காட்டும் போது கோபம் கொள்வதும்
அல்லது நியாயமாக தன்மையோடு  சுட்டிகாட்டுபவரையே ஏளனம் செய்வதையும் பலரது பதிவுகள் வெளிப்படுத்தி வருகிறது

பிறரது அந்தரங்க தவறுகளை அறிக்கைகளாக போட்டு அதில் இடம் பெறும் விமர்சனங்களை ஏளனங்களை  ரசித்து பார்த்து லைக்கை எண்ணி பரவசம் அடையும் சமூகவலைதள சாக்கடைகள்  ஒரு புறம்

தன்னிடம் இல்லாத திறமைகளை இருப்பதாக சித்தரித்து கொண்டு முறையான ஞானத்தை பெற்றுள்ளவர்களையும்  மட்டம் தட்டி மகிழ்கிறது ஒரு கூட்டம்

பாமரர்கள் தான் இவ்வகையில் உள்ளனர்  என்று சொல்ல இயலவில்லை

மாறாக கல்வி ஞானம் நிறைந்தோரும் சமுகவலைதளத்தில் தங்களை இழிநிலை உடையோராக காட்டி கொள்வோரும் உண்டு

லைக்குகளை எதிர் பார்த்து கருத்துக்களை போட நினைத்தால் சமூகவலைதளத்தில் தங்களை அறிவிலிகளாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்

கள்ள அய்டிகளில் அசிங்கத்தை பதிப்போரை விட நல்ல ஐய்டிகளில் கேடுகெட்ட விசயங்களை பரப்புவோரே உண்மையில் வெறுக்கத்தக்கவர்கள்

அந்தரங்கத்தை காட்டி லைக் பெறும் டிக்டாக் காமரச பெண்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை

குறிப்பாக ஆடவர்களுக்கு இறைவன் அவர்களின் மேனியில் பெண்களை போன்ற கவர்சிகளை ஏற்படுத்தவில்லை

ஒரு வேளை அவ்வாறு இறைவன் ஏற்படுத்தி  இருந்திருந்தால் ஆடவர்களின் பதிவுகள் முழுவதும்  கழிசடை பெண்களை விட மிகவும் மட்டமாக  தான் இருந்திருக்கும்

விதிவிலக்கு பெற்ற எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் நன்மையை நாடும் பதிவாளர்கள் மிக மிக குறைவு என்பதை அன்றாடம் காண முடிகின்றது

தவறான வார்த்தைகளை பேசும் தன்மை மாத்திரம் தீமையல்ல மாறாக தவறான எழுத்துக்களை உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை  பதிப்போரும் மாபெறும் பாவிகள் என்பதை உணராத வரை இந்நிலை மாறாது

وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது
என் இறைவன் அருள்புரிந்தாலன்றி நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கின்றான்

       (அல்குர்ஆன் : 12:53)

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்