அல்லாஹீ அக்பர்
♥ அல்லாஹீ அக்பர் ♥
→→→→→
கட்டுரை எண் 1332
J . Yaseen iMthadhi
************
ஒருவனின் ரசனை திறமை எந்தளவுக்கு அமைந்துள்ளதோ அந்த அளவுக்கு அவனது கண்டு பிடிப்புகளும் அழகானதாக அமையும்
சமையல் கலையில் கைவந்த சமையல்காரி முதல்
சாதனையை நோக்கி பயணம் செய்யும் சாணக்யன் வரை அவர்களின் கண்டு பிடிப்பும் இவ்வாறு தான் அமைந்திருக்கும்
எந்த அறிவை வைத்து மனிதன் தனது திறமையை இந்தளவுக்கு வெளிப்படுத்துகின்றானோ
அந்த அறிவை அற்புதமாக செதுக்கி அதற்குள் பல கலை வடிவங்களை அடுக்கி வைத்து எவ்வித முன்னுதாரணமும் மூலப்பொருளும் இல்லாது குறைகளுக்கும் அப்பாற்பட்டு சர்வத்தையும் படைத்திட்ட படைப்பாளன் இறைவனின் படைப்பை பற்றி சிந்திப்போருக்கு இறைவனே மாசில்லாத கலைஞன் என்பதை விரிவாக புரிந்து கொள்ள முடியும்
தூண் இன்றி தூக்கலாய் அமைந்துள்ள வானத்தின் உச்சியை மொட்டை மாடியில் படுத்து கொண்டு சிந்திக்கும் ஒருவனுக்கு இறைவனின் ஆக்கம் அதிசயத்தின் உச்சாணியை உணர வைக்கும்
மிளிரும் நட்சத்திரம் முதல் மிதந்து பயணிக்கும் மேகங்களில் இறைவனின் வல்லமை துளிகள் சிதறிப்போய் இருப்பதை கண்டு மனிதனின் பகுத்தறிவே இறைவனின் சந்நதியில் மண்டியிடும்
வானில் சுற்றும் பறவை முதல் பூமியின் அடுக்குகளில் வாழும் நுண்ணியிர்கள் வரை இறைவனின் வல்லமையை வியப்போடு மனிதனை பேச வைக்கும்
பறவைகளின் அழகுகள் முதல் அவை சிந்தும் மெல்லிய ராகமான குரல்கள் மற்றும் அதன் அற்புத நிறங்கள் வரை இறைவனின் ரசனை தன்மையே மாசற்றது என்பதை தனித்துவமாய் விளங்க வைக்கும்
இறைவனின் படைப்புகளை ஆய்வு செய்யும் திரனை பெற்ற மனிதனுக்கு உயிரின் வடிவமைப்பையும் அதன் செயலமைப்பையும் அதன் இருப்பிடத்தையும் கண்டறியும் ஞானத்தில் கடுகளவும் வழங்கப்படாததே இறைவனே மகா பெரியவன் என்பதற்கு ஆணித்தரமான சான்று ?
உங்கள் உடலில் அமைந்துள்ள உயிரின் இருப்பிடம் என்ன ?
உயிரின் நிறம் என்ன ?
உயிரின் மணம் என்ன ?
உயிரின் எடை என்ன ?
உயிரின் மூல பொருள் என்ன ?
எவ்வழியே அது உங்கள் உடலில் நுழைந்தது ?
எவ்வழி மூலம் அது உங்கள் உடலில் இருந்து வெளியேறுகிறது ?
இதில் ஒன்றுக்காவது மனித சமூகத்தில் ஒவ்வொருவரும் பதில் கூற முயன்று பாருங்கள்
நீங்களும் இறைவனின் அடிமை என்பதை அப்போதே மனதார ஏற்று கொள்வீர்கள்
الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்
வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, எங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை
நீ மகா தூய்மையானவன் (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக
(அல்குர்ஆன் : 3:191)
اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـٴًـــــا وَّهُمْ يُخْلَقُوْنَ
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்?
இன்னும் அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே
(அல்குர்ஆன் : 7:191)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment