சீமானின் தவறுகள்


            சீமானின் தவறுகள்
:
               [][][][][][][][][][][][][][][]
                     17- 05-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                     ***********

மாற்று அரசியலை முன்னெடுப்போம் அதுவே நாட்டுக்கு தேவை என்று  களமிறங்கிய சீமான்

மாற்று அரசியல்வாதிகளை போல்  தனது அரசியல் கட்சிக்கும்
காலம் சென்ற ஒரு மனிதனை  இந்தியாவுக்கு நேரடி தொடர்பில்லாத ஒரு மனிதனை
நம் நாட்டில் பிரதமராக இருந்த ஒருவரை படுகொலை செய்த ஒருவரை
முஸ்லிம் சமூகத்தின் அதிருப்திக்கு உள்ளான ஒரு மனிதனை
அதாவது ( இலங்கை பிரபாகரனை )
நாம் தமிழர் கட்சியின்
( தமிழ் இனத்தின்)  கதாநாயகனாக  மையப்படுத்தியது முதல் தவறு

அரசியல் களத்தில் தனக்கு பின்னால் பல தரப்பட்ட மக்களும் இருக்கின்றார்கள் என்று தெரிந்து வைத்து கொண்டே அரசியலுக்கு நேரடி தொடர்பில்லாத வகையில் நமது முப்பாட்டன் முருகன் என்றும் தாய்மதம் திரும்புவோம் என்றும் அரசியல் புரட்சிக்கு வந்த மக்களை நோக்கி ஆன்மீகம் பேச துவங்கியதும்  அரசியல் மேடைகளில்  மதங்களை விமர்சனம் செய்ததும்  இரண்டாம் தவறு

அதுவரை சீமானின் அரசியல் கருத்தை கவனித்து ஆதரவு தந்து கொண்டிருந்த மக்களுக்கு சீமானின் இந்த பேச்சு சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கியது

முப்பாட்டன் கதையை பற்றி மற்றவர்கள் எதிர் கேள்வி கேட்கும் போது அந்த கட்சியில் அங்கம் வகிக்கும் ஆதரவளிக்கும் முஸ்லிம்களுக்கும் பதில் சொல்ல இயலாத தர்ம சங்கடத்தை சீமானின் முப்பாட்டன்  பேச்சு காரணமாகி விட்டது

நாட்டை வளப்படுத்தும் அறிவார்த்த செய்திகளை மாத்திரம் முன்னிலை படுத்தி மேற்குறிப்பிட்ட இரு விசயங்களையும் தள்ளுபடி செய்து விட்டு தன்னை அக்கட்சியின் பிரதான தலைவராக மட்டும் வெளிப்படுத்தி காட்டி வழி நடத்தி  கொண்டிருந்தாலே போதுமானது

இளைய பட்டாளத்துடன் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் சூழ்நிலையில் தனது பாதையை சீர் செய்து கொண்டால் நிச்சயம் இனி வருங்காலங்களில் வெற்றி வாசலை ஓர் நாள் உங்களாலும் அடைய முடியும்

மற்றபடி சீமானையும் நாம் தமிழர் கட்சியையும்  முஸ்லிம் சமூகத்தின் பரம  விரோதியை போல் கடுமையாக விமர்சிக்கும் அளவு நம்மை பொருத்தவரை அவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள் அல்ல

மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி மோசமான கட்சி என்று முஸ்லிம்கள் விமர்சிக்கும் அளவு முஸ்லிம்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளும் முஸ்லிம் சமூகத்திற்கு பாடுபட்ட கட்சிகளும் அல்ல

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்