அரசியலும் முஸ்லிம்களும்

        கட்சிகளும் முஸ்லிம்களும்

                கட்டுரை எண் 1331

              J . Yaseen iMthadhi
                       ************
முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்தி செல்லும் அளவுக்கு  மார்க்க ரீதியில் இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை என்பது தான் உண்மை

இதில் இந்த கட்சிக்கு பின்னால் போகாதீர்கள்
அந்த கட்சிக்கு பின்னால் போகாதீர்கள்
அந்த தலைவருக்கு பின்னால் போகாதீர்கள்
இந்த தலைவருக்கு பின்னால் போகாதீர்கள்
என்று ஒரு குறிப்பிட்ட கட்சியை  தலைமையை விதிவிலக்கு செய்து விட்டு  மற்ற கட்சிகளை இதர தலைவர்களை விமர்சனம் செய்வது என்பது அறியாமையின் வெளிப்பாடாகும்

இந்தியாவில்  இருக்கும் மொத்த கட்சிகளும் நான்கு வகையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது

1 மதம் சார்ந்த கட்சிகள்

2 இனம் சார்ந்த கட்சிகள்

3 மதத்தை விமர்சிக்கும் கட்சிகள்

4 மொழி சார்ந்த கட்சிகள்

மனிதம் சார்ந்த கொள்கை  உடைய கட்சியை தவிர வேறு எந்த கட்சியையும் ஒரு முஸ்லிம் அரசியல் தலைமையாக இஸ்லாமிய மார்க்க ரீதியாக நிச்சயம் ஒப்புக்கொள்ளவே இயலாது

இறைவனை  நம்பும் கட்சிகளை விட இறைவனை  திட்டும் கட்சிகளுக்கு  கொடி பிடிப்பதும் ஜால்ரா போடுவதும் அவர்களுக்கு ஆள் சேர்ப்பதும் தான் இந்திய குறிப்பாக  தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டு வழக்கம்

அந்த கட்சியை விட இந்த கட்சி தான் நம் சமூகத்திற்கு குறைவாக பாதிப்புகளை துரோகத்தை வஞ்சகத்தை  ஏற்படுத்தியுள்ளது என்ற நிலையில் வாதிக்க இயலுமே தவிர

குறிப்பிட்ட ஒரு கட்சியை மாத்திரம் அடையாளம் காட்டி இந்த கட்சியால் தான் நம் சமூகத்திற்கு அதிகமான நன்மைகள் கிடைத்துள்ளது என்று எவரும் வாதிக்க இயலாது

இந்தியன் என்ற அடிப்படையில் தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்று வாக்களிப்பது தான் தற்போதைய இந்திய முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பாக இருக்க வேண்டுமே தவிர

இதில் வரம்பு மீறி ஒரு கட்சியை பாராட்டுவது பிற கட்சிகளை தூற்றுவது முஸ்லிம்களுக்கு கொள்கை ரீதியில்  உவந்த செயல் அல்ல

இந்தியாவில் இருக்கும் இரு பெரிய கட்சிகளில் ( காங்கிரஸ் பீஜேபி )
ஒரு கட்சி ஆளுமையில் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்பு மிக்க பாபர் பள்ளிவாசலை இடித்து தனது மதவெறுப்பை வெளிப்படையாக அறிவித்த கட்சி

மற்ற ஒரு கட்சியோ அதை தடுக்கும் ஆளுமை கைவசத்தில் இருந்தும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்படுவதை  தடுக்காது  வேடிக்கை பார்த்த கட்சி அது நாள் வரை நம்பியிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு பச்சை துரோகம் இழைத்த கட்சி

தமிழகத்தில் இருக்கும் (ADMK DMK) இரு பெரும் கட்சிகளில் ஒரு கட்சி முஸ்லிம் சமூகத்தை தனது ஓட்டு வங்கியாக மட்டுமே பல ஆண்டு காலம்  பயன்படுத்தி அவர்களின் இதயத்தில் மாத்திரம் பெயரளவுக்கு அரசியலில் இடம் அளித்த கட்சி

மற்ற ஒரு கட்சி முஸ்லிம்கள் நம்மை ஆதரிக்கவே மாட்டார்கள் என்று தவறாக  முடிவு செய்து முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் கட்சியோடு பல முறை கை கோர்த்து  நின்று கொண்டுள்ள கட்சி

நம் நாட்டில் அரசியல்வாதிகள் எப்போதும் புத்திசாலிகளாக தான் இருந்துள்ளனர்

நம் முஸ்லிம் சமூகம் தான் அரசியலில் புத்தியை கழட்டி வைத்து விட்டு பல ஆண்டுகள்  அரசியல்வாதிகளின் கருவேப்பிலையாக மட்டுமே பயன் பட்டு வருகின்றனர்

            நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்