தெர்மல் ஸ்கேன்
பள்ளிவாசல்களில் இபாதத்
நேரங்களை குறைப்பதால்
தொற்று நோய் தடுக்கப்படுமா
[][][][][][][][][][][][][]
21 -03-2020
J . Yaseen iMthadhi
************
தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஜும்மா உரை நேரம் குறைக்கப்படுவதாக முஸ்லிம்கள் விளக்கம் கூறினாலும் இது ஏற்புடையதா என்பதை நாம் சிந்திக்க முன் வருவது இல்லை
ஜும்மா உரை நேரம் குறைக்கப்படுவதாலோ அல்லது உரை நேரம் வழமை போல் நடப்பதாலோ தொற்று நோய் தாக்காது அல்லது தாக்கும் என்ற எந்த உத்திரவாதத்தையும் எவராலும் தர இயலாது அது சிந்தனைக்கும் எதிரானது
தொற்று நோய் உள்ள ஒரு மனிதன் தொற்று நோய் தாக்கப்படாத ஒரு சபையில் இருந்தால் இறைவன் நாட்டம் இருக்கும் பட்சத்தில் அது ஒரு மணி நேரத்திலும் பிறர் மீது தாவலாம் அல்லது ஒரு நொடியில் கூட தாவலாம்
சபையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொற்று நோய் தாக்கப்பட்ட நபரை தடுப்பது தானே தவிர உரையின் நேரத்தை குறைப்பதில் இல்லை
இதை கருத்தில் கொண்டு தான் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்களின் மீது அதிகாரிகள் தெர்மல் ஸ்கேனர் கருவியை கொண்டு ஆய்வு செய்கின்றனர்
அந்த கருவியின் மூலம் காய்ச்சல் கண்டறியப்படும் நபர்களை மாத்திரம் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து சென்று விடுவர்
இதே போல் பள்ளிவாசல்களில் வருகை தருவோரை குறிப்பிட்ட சில நாட்கள் பரிசோதித்து பள்ளியில் நுழைத்தால் வழக்கம் போல் பள்ளிவாசல்கள் அச்சமின்றி இயங்கும்
ஆனால் இதற்கு என்று சில நபர்களை நியமனம் செய்வதும் ரூபாய் 1500 மதிப்புள்ள இரண்டு அல்லது மூன்று தெர்மல் ஸ்கேனர் கருவிகளை வாங்குவது மட்டும் தான் ஜமாத்தார்கள் செய்ய வேண்டிய முயற்சியாகும்
இவ்வாறு சாத்தியமான அறிவுப்பூர்வமான வழிகளை தவிர்த்து விட்டு இபாதத் நேரத்தை சுருக்குவதும் ஜும்மாவை தளர்த்துவதும் ஜமாத்திற்கு ஒரு வாரம் விடுமுறை தருவதும் வீண் முயற்சியாகும்
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் ஜும்மாவை நடத்தும் இமாமும் வழக்கமாகவே ஜும்மாவுக்கு வருகை தரும் பல மக்களும் பள்ளிவாசலில் 12:30 மணிக்கே வந்து ஒரு மணிவரை காத்து உள்ளனர்
ஆனால் ஜும்மா உரை மற்றும் தொழுகை ஜமாத் மட்டும் ஒரு மணிக்கு தொடங்கி கால் மணி நேரத்தில் விரைவாக முடிக்கப்படுகிறது
அப்படியானால் ஜும்மா உரை துவங்கும் முன்பே காத்திருக்கும் நபர்களையும் இமாமையும் கொரானா வைரஸ் தாக்காதா ?
இனியாவது சிந்தனை ரீதியான நடவடிக்கைகளில் பாதுகப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்
நாடே ஒரு வழியில் செல்கிறது என்பதற்காக நாமும் அவர்களின் அறிவு சாரா வழிகளை பின்பற்ற வேண்டும் என்பது சரியான அணுகுமுறை அல்ல
ஒரு வகையில் தற்போது பின்மற்றப்படும் இந்த நடவடிக்கையும் தொற்று நோயை பரப்பும் நடவடிக்கை தான்
எது சிந்தனைக்கும் தற்காப்புக்கும் சரி என்று படுகிறதோ அதை இந்த ஆக்கத்தின் மூலம் தனிப்பட்ட கருத்தாக வெளிப்படுத்தியுள்ளோம்
இதை ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் சிந்தனையின் முடிவே
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment