கோழி

                அறிவீனர்களால்
நாட்டின் வருமானம் சிதைக்கப்படும்
             இறைச்சி கோழிகள்

     ♦♦♦♦♦♦♦♦♦♦                                                
             கட்டுரை எண் 1323
                     بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                
          ★★★★★★★★★★★

உலகில் வைரஸ் தொடர்பான அச்சம் ஏற்படும் பொழுதெல்லாம் சமூகவலை தளங்களில் வழக்கமாக இறைச்சி கோழிகளை காரணம் காட்டியே அவதூறு பிரச்சாரங்களை அறிவிலிகள் செய்து வருவது வாடிக்கையாகி உள்ளது

கடந்த காலங்களில் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட அழிப்பு வீடியோக்களையும் நோய் மூலம் பாதிப்புக்கு உள்ளான கோழிகளின்
புகைப்படங்களையும் தேடி பிடித்து தற்போதைய வைரஸ் காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக பொய்களை பரப்பி கொண்டுள்ளனர்

தொலைகாட்சி செய்திகளிலும் விழிப்புணர்வு ஊட்டுகிறோம் எனும்
பெயரில் இறைச்சிகோழிகளை விமர்சனம் செய்யும் போதும் கூட பண்ணைகளில்  கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்ற முட்டை போடும்  கோழிகளின் வீடியோக்களை தான் வழக்கமாக காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்

முட்டை கோழி என்பது வேறு
கறிக்கோழி என்பது  வேறு
என்ற சாதாரண நாலேஜ் கூட தொலைகாட்சி நடத்துவோருக்கு இல்லை

வீட்டின் அருகில் இருக்கும் கோழி கடை  வியாபாரிகளும் கோழி பண்ணை தொழிலாளர்களும் எவ்விதமான பாதிப்புகளுக்கும் உள்ளாகவில்லை அதன் மூலம் சாகவும் இல்லை  என்று தெளிவாக தெரிந்து கொண்டே  சமூகவலைதளங்களில்  அநோதமயங்களால்  பரப்படும் போலி செய்திகளை நம்பும் அளவு மக்களின் மனோநிலை மாறி விட்டது

இதனால் நாட்டின் வருமானம்  பாதிக்கப்படுவதோடு

கோழி வியாபாரத்தோடு பிணைந்துள்ள ( தீவன)  மக்காசோள வியாபாரிகள் சோயா வியாபாரிகள் கோழி  ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் கோடிகணக்கில் பணத்தை மூலமாக போட்டுள்ள  பண்ணை முதலாளிகள் கறிக்கோழி வணிகர்கள் உட்பட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

தற்போதைய சூழலில் கோழி பண்ணையாளர்கள் பாதிக்கப்பாலும் நிலைமை சீரான பின் இதை காரணம் காட்டியே பல மாதங்கள் கோழிகறியின் விலையை கடுமையாக உயர்த்தி ஈடுகட்டும் பொழுது அப்போதும் கோழிகறி பிரியர்களுக்கு தான் அதுவும் சிரமத்தை ஏற்படுத்தும்  என்பதை வாடிக்கையாளர்கள் புரிய வேண்டும்

காரணம் தற்காலத்தில் பிராய்லர் கோழி இல்லாது ஹோட்டல்களும் நடைபெறாது  சுபகாரியங்களும் எளிமையாக நடக்காது என்ற சூட்சமத்தை புரிந்தவர்களே கோழி பண்ணைக்காரர்கள்

          நட்புடன்  J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்