கொரானா சிந்தனை
கொரானா சிந்தனை
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1328
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
எந்தளவுக்கு மனித சமுதாயம் சிக்கலை எதிர் கொள்கிறதோ அந்தளவுக்கு அதற்கான மாற்று வழிகளையும் தீர்வுகளையும் நோக்கியே விரைவில் பயணிப்பான் என்பது தான் இறைவன் ஏற்படுத்திய உலக நியதி
பாதிப்பை அடைந்த சில காலம் பரபப்பாக அவைகள் பேசப்பட்டாலும் நாளடைவில் எந்த ஒரு ஆபத்தும் கெடுதலும் நீக்கப்பட்டு விடும் என்பதும் மனிதனின் ஆற்றலே அதை வென்று விடும் என்பது தான் கடந்த கால வரலாறு
அதே நேரம் சர்வ உலகத்தின் அதிபர்களும்
விண்ணை ஆய்வு செய்து பல அரிய கண்டு பிடிப்புகளை வெளியில் கொண்டு வந்த ஆய்வாளர்களும்
தீர்வுகளை தெளிவாக சொல்லும் சிந்தனைவாதிகளும்
கண்ணுக்கு தெரியாத உணர்வுகளால் அறிய முடியாத கருவிகளால் மாத்திரமே காண முடிகின்ற அர்ப்பமான கொரானா வைரஸ் தாக்குதலை எதிர் கொள்ள இயலாமல் கைகளில் உறைகளை போட்டு கொண்டும்
முகத்தை மூடும் கவசங்களை அணிந்து கொண்டும்
சிறைச்சாலை போல் தனது இல்லங்களுக்குள் பெட்டி பாம்புகளாக அடங்கி இருப்பதிலும்
ஏக இறைவனின் வல்லமையும் அவன் நாடாது எதையும் மனிதனால் அவன் நினைத்த நேரத்தில் நினைத்த கோணத்தில் சாதிக்க இயலாது என்பதையும் தெளிவாக நிரூபித்து காட்டி விட்டது
இத்தகைய சூழலிலும் இந்த பாதிப்புகளுக்கு கை வசத்தில் தீர்வு கண்டு பிடித்து வைத்திருப்பது போல் கற்பனையில் எண்ணி கொண்டு இறைவனையும் இறைநம்பிக்கை உடைய மக்களையும் கிண்டல் செய்து கொண்டு தனது பகுத்தறிவே மேலானது என்ற மமதையில் மூடத்தனமான அறிக்கைகளை போட்டு சுற்றும் அறிவிலிகளையும் சமூகவலை தளங்களில் பரவலாக காண முடிகின்றது
இது போன்றவர்கள் இக்கட்டான சூழலில் இறைநம்பிக்கையுடைய மக்கள் மனித சமூகத்திற்கு செய்யும் சேவைகளிலும் தான தர்மங்களிலும் கால் பகுதியை கூட தனது வாழ்நாளில் செய்திருக்க மாட்டார்கள் அது போன்ற நற்கருமங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ மாட்டார்கள் என்பதே நடை முறை உண்மை
வெற்று தத்துவம் பேசியே நேரத்தை வீணடிக்கும் இது போல் அறிவிலிகளை கொரானா வைரஸ்களை விட ஒரு படி மேல் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முன்னெச்சரிக்கையை பேணுவோம் இறைவனிடம் பிராத்திப்போம்
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது
அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை
தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான்
அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்
(அல்குர்ஆன் : 10:107)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment