அச்சம் தவிர்ப்போம்

             அச்சம் தவிர்ப்போம்
          இயல்பை சிந்திப்போம்

                [][][][][][][][][][][][][][][]

     24-03-2020 கட்டுரை எண் 1325
               J . Yaseen iMthadhi
                      ***********
தொற்று நோய் அபாயம் உலகில் இப்போது தான் புதிதாக ஏற்பட்டுள்ளது என்பதை போல் மனிதர்களில் பலர்கள் எப்போதும் அதை பற்றியே யோசிக்கும் மனநிலைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர்

எனக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டு விட்டால் என் மனைவியின் வருங்காலத்தை யார் பார்ப்பது என்ற சிந்தனையில்  கணவனும்

கணவன் வெளியே செல்லும் பொழுது அவரை தொற்று நோய் தாக்கி விட்டால் நாமும் நம் குழந்தையும் அனாதையாகி விடுவோமே என்ற ஆழ்மன பயத்தில்  மனைவியும்

எதிரே வரும் நண்பன் புன்னகையோடு கை கொடுக்க வரும் போது அவனது கையில் கொரானா ஒட்டியிருக்குமோ என்ற பயத்துடனே கை கொடுக்கும் நண்பனும்

குண்டு துளைக்காத கார்களில் வலம் வந்து கொண்டிருந்த உலக நாடுகளின்  அதிபர்கள் தன்னை கொரானா ஆட்டி படைத்து விடுமோ என்ற அச்சத்தில் பல அடுக்கு பாதுகாப்பு வசத்தில் ஒளிந்திருப்பதும்

தற்போதைய சூழ்நிலையாகி விட்டது

இதற்கு மூல காரணம் உலக செய்திகள் யாவும்  நம் கைவசத்தில்  சுருங்கியது தான்

எதார்தத்தை சொல்வதாக இருந்தால் கொரானா எனும் வைரஸ் இதற்கு முன் தோன்றிய வைரஸ்களின் பாதிப்பை விட குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும் தன்மை கொண்டது தான்

ஏழு நூறு கோடி உலக மக்களில் கொரானா வைரஸ் மூலம் இது வரை இறப்பை தழுவியவர்கள் பதினைந்து ஆயிரத்தை கூட தாண்டவில்லை

கொரானா வைரஸ் அறிகுறி உலகளவில் மூன்று  இலட்சத்திற்கும் குறைவானவர்களுக்கு தான் ஏற்பட்டு உள்ளது

உலகளவில் இந்த வைரஸ் மூலம் தாக்கப்பட்டு மாண்டவர்களை விட மீண்டவர்களே பத்து மடங்கு அதிகம்

அவ்வாறு மாண்டவர்கள் எல்லாம் இந்த வைரஸ் மூலம் தான் இறந்தார்கள் என்று அடித்தும் சொல்ல முடியாது

மரணத்திற்கு உடலியல் ரீதியாக  பல பலவீனமும்  காரணமாக இருக்கலாம்

எப்படியிருந்தாலும் கொரானா மூலம் நாம் மரணத்தில் இருந்து தப்பினாலும் மரணத்தை விட்டே யாரும் தப்பிக்க இயலாது என்பது மட்டுமே உண்மை

எனவே தேவையற்ற அச்சங்களை தவிர்த்து விட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே செயல் படுத்துங்கள்

24 மணி நேரமும் கொரானா கொரானா என்று தொற்று நோயை பற்றியே   பேசி கொண்டிருக்காது சமூகத்தின் முன்னேற்றத்தை பற்றியும் வாழ்வின் மகிழ்வுகளையும் பகிர்ந்து உறவுகளோடு இணைந்து வாழுங்கள்

எந்த வித பொருளாதார பலமும் வாழ்வதற்குரிய  வீடும் கூட இல்லாமல் எந்த வித அச்சத்திலும் தன்னை ஈடுபடுத்தி மனநோயில் சிக்காமல் குழந்தைகளோடு  தெருவில் படுத்து உறங்கும் ஆயிரமாயிரம் ஏழைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளம் உண்டு

அவர்களை சிந்தித்தாவது உளவியல் நோய்களில் இருந்து விடுபடுவோம்

وَقَطَّعْنٰهُمْ فِى الْاَرْضِ اُمَمًا‌  مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰ لِكَ‌ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّيِّاٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ 

அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்
அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கின்றார்கள்
அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும் தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்

         (அல்குர்ஆன் : 7:168)

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்