கொரானா மருத்துவம்
கொரானாவை விட பாதிப்பை
ஏற்படுத்தும்
மருத்துவம் இல்லா மனநோய்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1325
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
மருந்தும் மாத்திரைகளும் எந்த நோய் தாக்குதலுக்கு கைவசம் உள்ளதோ அந்த நோய்களை பற்றி எந்த விதமான அச்சத்தையும் அறிவுரைகளையும் அரசாங்கம் வழங்காது
கொரானா தொற்று நோயை கட்டுப்படுத்த இதுவரை எந்த நாட்டிலும் முறையான தடுப்பூசிகளோ மருந்து மாத்திரைகளோ கண்டறியப்படாததின் விளைவு தான் முன் எச்சரிக்கை எனும் பெயரில் பல விதமான கட்டுப்பாடுகள் புற்றீசலாய் உலா வருகிறது
கொரானா தாக்கி மனித மனம் நொந்து போவதை விட தற்போதைய எச்சரிக்கை செய்திகளை தலைப்பு செய்தியாக தொலைகாட்சிகளில் பார்த்தே ஒவ்வொரு மனிதனும் அவனை அறியாமலேயே மனநோயாளியாக மாற்றப்பட்டு வருகிறான் என்பதே உண்மை
கடவுளை மறந்து மனிதனை நினைவு கூறு என்று நாத்தீகம் பேசிய பலர்களும் இன்று அவர்களின் உறவுகளின் கரங்களை தொட்டால் கூட கொரானாவின் தொற்று நம்மை தாக்கி விடுமோ என்று கருதி உலவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்
இதில் வேதனையான விசயம் என்னவெனில் உலகில் எல்லா நோய்களுக்கும் மருந்துகள் உண்டு அல்லது இனி வருங்காலத்தில் கண்டு பிடிக்க இயலும்
ஆனால் மனநோய்கு தான் மருந்து மாத்திரைகளை மனித ஆற்றலால் உருவாக்கவே இயலாது என்பதை ஏனோ அறிவு ஜீவிகள் நினைவு கூற மறந்து விட்டனர்
டெலஸ்கோப் வைத்து நோயாளியின் உடல் நலனை அன்பாய் பரிசோதிக்கும் மருத்துவர் கூட தற்போதைய கொரானா மிகைப்படுத்தப்பட்ட பீதியால் கைகள் நடுங்கியே நோயாளியின் மீது டெலஸ்கோப் வைத்து பரிசோதிப்பதாக நையாண்டி செய்ய துவங்கி விட்டனர்
சாதா நிலையில் ஒரு மனிதன் இருமினால் கூட கொரானாவின் தாக்கமாக இருக்குமோ என்று அவனே கருதும் அளவு உலவியல் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது
இதில் ஈமான் கொண்டோரும் மனதளவில் தடுமாறி விட்டதை பல செயல்பாடுகள் வெளிப்படுத்தி வருகிறது
இந்நிலை தொடருமானால் இறையச்சத்தை விட கொரானா அச்சமே முன்னனி வகிக்கும்
இந்நிலையை மாற்றிட மனநோய்கு சரியான ஆன்மீக மருத்துவம் திக்ருகள் மட்டுமே
இறைவனை நினைப்போம் துதிப்போம் பிராத்திப்போம்
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்
மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க
(அல்குர்ஆன் : 13:28)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment