கொரானா முஸ்லிம்

        கொரானாவும் முஸ்லிம்கள்
         எதிர் கொள்ளும் முறையும்
       
       ♦♦♦♦♦♦♦♦♦♦                                                
             கட்டுரை எண் 1325
                     بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                
          ★★★★★★★★★★★
கொரானா என்ற வைரஸ் மூலம் தற்போது மனித சமூகம் உலக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது மட்டும் தான் அறிவியல் பூர்வமாக  ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்

கொரானா வைரஸின் அனுக்கூறுகளை முழுமையாக இது வரை ஆய்வு செய்து இதை ஒழிக்க இது தான் தீர்வு என்று இது வரை கொரானா வைரசுக்கு மருத்துவ உலகம் தீர்வை எட்டவில்லை 

அதன் விளைவு தான் சீனாவில்   தோன்றிய கொரானா இப்போது உலகில் 134 நாடுகளில் பரவியதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது

கொரானா தற்காப்புகளை பற்றி ஊடகங்கள் மருத்துவர்கள்  கூறும் எந்த தடுப்பு முறைகளும்  இதற்கு முன் உலகில் தோன்றிய தொற்று நோய்களுக்கு செய்யப்பட்ட மருத்துவத்தை  வைத்து அனுமானமாக கூறும் மருத்துவ முறைகள் தான்

17:03:2020 அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரானா தடுப்பு மருந்தும் கூட கொரானா தாக்கப்பட்ட மனிதனுக்கு உரிய நிவாரணம் தரும் என்பதை கூட முழுமையாக கண்டறிய 18 மாதங்கள் ஆகும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே கொரானாவை பற்றி காணும் செய்திகளை எல்லாம் உண்மை என்று நினைத்து மனதில் அச்சத்தையும் பீதியையும் நாமாகவே  ஏற்படுத்தி கொள்ள கூடாது

தற்போதைய சூழலில் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை வளர்த்தி கொண்டால் போதுமானது

1 தொற்று நோய் இருக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் தொற்று நோய் தாக்காத பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

(இவ்வகையில் தொற்று நோய் மூலம் தாக்கப்பட்டவர்கள் தொற்று நோய் தாக்காத மக்களிடம் இருந்து விலகி இருக்கலாம் 

இஸ்லாமிய கூட்டு முறை வழிபாடு செய்யும்  ஜமாத்துகளில் இருந்து தவிர்ந்து  கொள்ளலாம் 
மாறாக இவர்களுக்காக தொற்று நோய் தாக்காத மக்கள் பங்கு  கொள்ளும் இஸ்லாமிய  கூட்டு முறை வழிபாடுகளை பள்ளியில் இருந்து நிறுத்த வேண்டிய ஒரு அவசியமும் இல்லை)

2 தொற்று நோய் தாக்கும் சூழ்நிலை இருக்கும் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பதை தொற்று நோய் தாக்காதவர்கள் பின்பற்ற வேண்டும்
இதை ஒட்டி அரசாங்கம் எடுக்கும் அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் குறை காண தேவையில்லை அது போன்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கலாம்

அதே நேரம் பயணம் சென்றாலோ அல்லது கூட்டத்திற்கு இடையில் நின்றாலோ தொற்று நோய் நம்மையும் தாக்கி விடுமோ என்று அஞ்சி கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை

காரணம் காலரா நோய் மூலம் இறந்தால் கூட அந்த மனிதனும் உயிர் தியாகி  ( மறுமையில் சஹீத் உடைய அந்தஸ்த்தை பெறுவான் ) என்று தான் இஸ்லாம் கூறுகிறது
காரணம் தொற்று நோய் அச்சத்தால் ஒரு மனிதன் கோழையாக மாறி வீட்டிலேயே முடங்கி விட கூடாது என்பதால் தான்

இது யாவற்றுக்கும் மேல் இறைவனின் நாட்டம் இல்லாது எந்த ஒரு தீங்கும் நம்மை அணுகாது என்ற அசைக்க இயலாத நம்பிக்கையும் அதை ஒட்டிய  பிராத்தணையும் தான் முஸ்லிம்கள் கொரானா விசயத்தில் பின் பற்ற வேண்டிய விசயங்களாகும்

                      *******
720. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

மூழ்கி இறந்தவர்களும்
காலராவில் இறந்தவர்களும் வயிற்றோட்டத்தில் இறந்தவர்களும் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்களும் ஷஹீத்களாவர்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
   
           நூல் ஸஹீஹ் புகாரி

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்