இலங்கை அகதிகள்

            இலங்கையை சார்ந்த
                  சகோதரத்துவ
         இந்து மத அகதிகளுக்கு
            குடியுரிமை கொடுப்பீர்
                   *************
      20-02-2020 கட்டுரை எண் 1316
             J . Yaseen iMthadhi
                        **********

இலங்கை போரின் போது அங்கிருக்கும் பல அப்பாவி தமிழர்கள்  போருக்கு பயந்து உயிருக்காக  அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்

தமிழகத்தில் கிட்டதட்ட 148 அகதிமுகாம்கள் அவர்களுக்காகவே செயல்பட்டு கொண்டுள்ளது

ஒரு இலட்சத்திற்கும் மேல்  எண்ணிக்கையில் இலங்கை அகதிகள் தமிழகத்தில் உள்ளனர்

அந்த அகதிகளில் 98 சதவிகித மக்களும் நமது சகோதரத்துவ சமுதாயமான  இந்து சமூகத்தை சார்ந்த அப்பாவிகள் தான்

பல வருடங்களுக்கு முன் அகதியாக வருகை தந்த பல இந்து சமுதாய  பெண்கள் இந்தியாவில் வந்த பின்பு தான் திருமணமும் செய்து  குழந்தைகளை ஈன்று சிலர்கள் பேரக்குழந்தைகளையும் பெற்ற வயதில் உள்ளனர்

அவர்களின் பிள்ளைகள் இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து இந்தியாவில்  வேலை பார்த்தாலும் அவர்களின் தாய் இலங்கை நாட்டு அகதி என்ற ஒரே காரணத்திற்காக இவர்களும் பல வருடம்  அகதியாகவே நம் நாட்டில்  நடத்தப்பட்டு வருகின்றனர்

அவர்கள் வாழும் பகுதிகள்  கண்காணிப்பு இல்லாமல் அடிப்படை வசதியும் கூட இல்லாமல் தீயவர்களின் தீண்டுதலுக்கு அவர்களின் குமரிபெண்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு கொண்டுள்ளனர் என்பதற்கு நூற்று கணக்கில் வீடியோ ஆதாரங்கள் உள்ளன

அகதியாக அவர்கள் இருக்கிற காரணத்தால் அரசாங்கமும் காவல்துறையும் அவர்களின் பாதிப்புகளை செவிமடுப்பது இல்லை என்ற ஆதங்கமும் அந்த அப்பாவி மக்களிடம் அதிகம் உண்டு

இலங்கை அரசும் அவர்கள் நாட்டை சார்ந்த அகதியான தமிழர்களை பல காலம்  வரவேற்காது இருக்கும் பட்சத்தில் நம் நாடே கதி என்று நம்பிக்கையோடு  அடைக்கலம் வந்திருக்கும் இந்தியாவும்  அந்த மக்களுக்கு  குடியுரிமை தரமாட்டோம் என்று சொல்வது மனிதாபிமானம் இல்லாத செயலாகும்

அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுப்பதில் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட போகிறது ?

இந்தியாவுக்கு நேரடி தொடர்பு இல்லாத இஸ்லாமிய நாடான  ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து யாராவது இந்தியாவுக்குள் வந்தால் அவர்களுக்கு  குடியுரிமை கொடுப்போம் என்று சொல்லுகிற பீஜேபி அரசாங்கம் ஆப்கானிஸ்தான் நாட்டை  விட மொழியாலும் இந்து மதத்தாலும் கலாச்சாரத்தாலும் இந்தியாவோடு நெருங்கிய  தொடர்பில் இருக்கும் இலங்கையை சார்ந்த இந்து சமுதாய  அகதிகளுக்கு குடியுரிமை  கொடுக்க வேண்டும் என்பது தான் இந்திய முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் இதையும் ஒரு வேண்டுகோளாக அரசாங்கத்திடம் முறையிடுவது முஸ்லிம்களுக்கு மகத்தான நன்மையை பெற்று தரும் காரியமாகும்

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்