திண்டுக்கல் சீனிவாசன்

                 யார் குற்றவாளி

            [][][][][][][][][][][][][][][][][]

          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                     •••••••••••••••••
            கட்டுரை எண் 1314
                        ********
காசு கொடுத்தால்  தன்மானத்தையே இழக்கும் பிறவிகளுக்கு பரிந்து  பேசுவதோ இரக்கப்படுவதோ  நம்மை பொருத்தவரை அவசியமற்றது

சிறுவனை கால்களில் அணிந்த காலணிகளை கழட்டுவதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அழைத்ததை சிறுவனின்  பெற்றோர்கள் பெரும் தன்மையோடு  மன்னித்தால் அது பெற்றோரின் தனி சிறப்பாக பேசலாம்

ஆனால் மகனை இழிவு படுத்தியதாக பேட்டி கொடுத்த தாயே இழிவு படுத்தியதாக கூறப்படும்  அமைச்சரிடம் உதவிகளை வாங்கி கொண்டு எல்லாம் இப்போது சரியாகி விட்டது எனவே இதை பெரிது படுத்த வேண்டாம் என்று அந்த சிறுவனின் தன்மானத்திகு குரல் கொடுத்த மக்களை மட்டப்படுத்தியது தான் குரல் கொடுத்த மக்களை இழிவு படுத்திய
செயலாகும்

தன்னை உயர்ந்த ஜாதியாக கருதுபவனை கம்பால் அடிப்பது சரி என்றால்
தன்னை தாழ்ந்த ஜாதியாக கருதிய நபரிடமே உதவிகளை வாங்கிய  தாயை எதை  கொண்டு அடிப்பது என்றே சிந்திக்க தோணுகிறது

படைத்தவனை சரியாக புரியாத எவராலும் இதன் நியாயத்தை தெளிவாக புரிய முடியாது

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏ 

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

(ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்

நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்

         (அல்குர்ஆன் : 49:13)

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்