முஸ்லிம் சமூகத்தின் அவமானம்
குடியுரிமை திருத்த சட்டமும்
சமூகத்தில் சில அவமானங்களும்
[][][][][][][][][][][][][][][][][]
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
கட்டுரை எண் 1312
********
குடியுரிமை திருத்த சட்டமா ? அப்படியா !!
ஆமா அப்படீன்னா என்னங்க ?
என்று கேட்கும் சில முஸ்லிம் நபர்களும்
குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று முழு சங்கிகளை போல் உருமாறி வேடமணிந்த சில முஸ்லிம் நபர்களும்
குடியுரிமை பதிவுக்கு அதிகாரிகள் வரும் போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை திரட்டுவதற்கு ஊர் ஊராக அதிகாரிகளை தேடி செலவு செய்து அலையும் சில சமூக அக்கரையே இல்லாத சில முஸ்லிம் நபர்களும் நமது சமூகத்தில் இருப்பதை நினைத்து வருந்துவதா ? அல்லது நகைப்பதா ? என்றே தெரியவில்லை
சமூகத்தின் சிந்தனையும் பொது அறிவும் அறவே இல்லாத இவர்களுக்கும் சேர்த்து கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நேரங்களை பொருளாதாரத்தை செலவு செய்து ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு வருவது தான் தவிர்க்க இயலாத வேதனையாக உள்ளது
இந்நிலையில் இருப்பவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் ஏற்படுத்தும் விளைவுகளை விட மிகவும் ஆபத்தானவர்கள் என்பதையும்
தங்களது குடும்பத்தை மட்டும் காப்பாற்ற எதையும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதையும் உணர்ந்து முஸ்லிம் சமுதாயம் இவர்களின் விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
பொருளாதாரத்தின் மீதுள்ள மோகமும் உலக இன்பங்கள் மீதுள்ள அடிமைத்தனமும் தான் இந்நிலைக்கு மிகவும் முக்கியமான காரணம்
முன்னால் குடியரசு தலைவர் பக்ருத்தீன் அலி அவர்களின் குடும்பமும்
முப்பது வருடம் இராணுவத்தில் பணியாற்றி கார்க்கில் போரில் பங்கு கொண்டு பரம்வீர் சக்ரா விருதை பெற்ற இராணுவ வீரர் முஹம்மது சனாவுல்லா
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் முதல்வர் சைய்யிதா அன்வரா
போன்றோரின் பெயர்களையே குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மறைக்கப்பட்டிருக்கும் போது
மேற்கூறப்பட்ட நபர்களின் முயற்சிகள் வீணாணது என்பதை அவர்கள் அனுபவத்தில் அறியும் போது தான் புரிவார்கள்
அதுவரை இவர்கள் திருந்தப்போவதும் இல்லை வருந்தப்போவதும் இல்லை
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِ
காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!)
உம்மை மயக்கி விடவேண்டாம்
(அல்குர்ஆன் : 3:196)
اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக)
(அல்குர்ஆன் : 8:49)
ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا فَالْيَوْمَ لَا يُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே ( நரகம் என்ற )
இந்த நிலை இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள் மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 45:35)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment