விழிப்புணர்வே முக்கியம்

     விழிப்புணர்வே முக்கிய தேவை
           
              [][][][][][][][][][][][][][][][][]
                     16-01-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                     •••••••••••••••••
     
குடிமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சிந்தனை தமிழக மக்களிடம் இருந்தாலும் அந்த சட்டத்தின் பாதிப்பை உணர்ந்த அளவுக்கு உண்டான எதிர்ப்பு குரல் குறைந்து காணப்படுகிறது என்று சொன்னால்

பல முயற்சிகள் செய்தும்  போராட்டங்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது என்று சொன்னால்

CAA NPR NRC என்றால் என்ன ? அதனால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் என்ன ? என்பதை அநேகமான மக்கள் விபரமாக புரிந்திருக்கவில்லை  என்பது தான் உண்மை

ஆர்ப்பாட்டம் போராட்டம்  கூட்டங்களில் கடந்த காலங்களி . நாட்டிற்காக நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மாத்திரம் பேச்சாளர்கள் எடுத்து வைப்பதில் முக்கியதுவம் காட்டுகிறார்களே தவிர குடியுரிமை திருத்த  சட்டத்தின் விளைவுகளை தெளிவாக எடுத்து வைப்பது இல்லை அதற்கான நேரமும் கொடுக்கப்படுவது இல்லை காரணம் பல சமூக  தலைவர்களை  முன்னிலை படுத்தி மேடையை கம்பீரமாக காட்டுவதில் தான் அதிகமான கவனம் செலுத்தப்படுகிறது

டெல்லி போன்ற நகரங்களில் எவ்வித தலைமையும் இல்லாமல் பெண்கள் மாத்திரமே இரவு பகலாக போராட்டங்களில் அணி அணியாக பங்கெடுத்து வருவது அவர்களின் அறிவார்ந்த நடைமுறையை காட்டுகிறது

நமக்காக இவர்கள் போராடுவார்கள் என்ற சமூக அக்கரை இல்லாத எண்ணத்தில் இருந்து விடுபட்டு நமக்காக நாம் தான் போராட வேண்டும் என்ற மனோநிலையை மக்கள் வளர்த்தி கொள்ளும் விதம் குடியுரிமை திருத்த சட்டத்தின் ஆபத்துகளை சூழ்ச்சிகளை
விளக்கி ஒவ்வொரு பகுதியிலும்  கூட்டம் நடத்தப்பட வேண்டும்

துண்டு பிரசுரம் மூலம்  குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன என்பதை எளிமையான முறையில்  அச்சடித்து ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பரவலாக விநியோகம் செய்து கொண்டிருக்க வேண்டும்

ஜும்மாக்களில் முதல் உரை மார்க்கம் தொடர்பாகவும் இரண்டாம் உரை இவ்விசயத்தை பற்றிய எச்சரிக்கை உரையாகவும் ஆலீம்கள் தொடர்ந்து அமைத்து கொள்ள வேண்டும்

இனிமேலும் இவ்விசயத்தில் தெளிவற்று நடந்தால் நிச்சயம் நாம் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாக விரைவில் மாற்றப்பட்டு அகதிகளாக ஆக்கப்பட்டு  விடுவோம் என்பதில் எள் அளவு சந்தேகமும் இல்லை

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்