ஏர்வாடி மன்னர் இப்ராஹீம் பாதுஷா

    நாணயம் மூலம் நாட்டின் வளம்
        வளர்த்த ஏர்வாடி மகான்

   சுல்தான் செய்யது இப்ராஹீம்
                      பாதுஷா
            [][][][][][][][][][][][][][][][][]

          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                     •••••••••••••••••
            கட்டுரை எண் 1313
                        ********

தமிழகத்தில் புகழ் பெற்ற இடங்களில் ஒன்று தான் ஏர்வாடி
சுல்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா என்ற ஒருவரின் தர்ஹா ( மண்ணறை) தான் அவ்வூரின் புகழுக்கு தனிச்சிறப்பு என்பதே நம்பப்பட்டு வரும் மேலோட்டமான  தகவல்

இவரது சரியான வரலாறை அவரது மண்றையை காட்டியே சம்பாரிக்கும் தர்ஹா நிர்வாகமும்
மகான்களின் பெயரால் அனாச்சாரங்களை அரங்கேற்றம் செய்து வரும் பக்கீர்சாக்களும் அவரது வரலாறை  முறையாக எடுத்து சொல்லாததின் காரணத்தால் தான்  இறையடியார் என்ற கோணத்தில் மாத்திரம் சுல்தான் செய்யத் இப்ராஹீம் பாதுஷா மக்கள் மனதில் முடக்கப்பட்டு விட்டார்

உண்மையில் சுல்தான் செய்யது இப்ராஹீம்  என்பவர் யார்  ?

நபிகளார் அடக்கம் செய்யப்பட்ட மதீனாவில் அன்று யர்துப் என்று அழைக்கப்பட்ட  நகரில் இருந்து கிபி 1186 ஆண்டு கண்ணூர் வழியாக தமிழகம் வந்த ஒருவரே சுல்தான் செய்யத் இப்ராஹீம் பாதுஷா

நாளடைவில்  (கி.பி. 1195 முதல்
கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னராக இருந்தவர்

தமிழகத்தில் முதல் இஸ்லாமிய மன்னர் என்ற வரலாற்றுக்கும் இவரே  உரித்தவராவார்

வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் வருகைக்கு பிறகு  தோற்கடிக்கப்பட்டு நாட்டை காப்பாற்றும் முயற்சியில்  வீர மரணத்தை தழுவியவரே சுல்தான் செய்யத் இப்ராஹீம் பாதுஷா என்பவர்

அவரை அடக்கம் செய்யப்பட்ட பகுதியே யர்துப் என்று அவரது பூர்வீக இடத்தை குறிப்பிட்டு அடையாளமாக்கப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது

நாளடைவில் யர்துப் என்ற வார்த்தையே மருவி எர்வி என்றும் இறுதியில் ஏர்வாடி என்றும் வழக்கத்தில் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது

பண்டமாற்று முறை மூலமே நம் நாட்டின் பொருளாதார அமைப்பு இருந்ததால் அதன் சிக்கலை தவிர்ப்பதற்கு நாணயங்களை இந்தியாவில் முதல் முதலாக வெளியிட்ட மன்னர் இவர் தான்

அதன் பிறகே நாணயங்களோடு தாளில் அச்சடிக்கப்பட்ட பணம் என்ற பொருளாதார  முறையும் முகலாய மன்னர்களால் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது

சுருக்கமாக சொன்னால் நாணயங்களை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைத்து வளர்ச்சியை ஏற்படுத்தியவர் சுல்தான் இப்ராஹீம் பாதுஷா ஆவார்

தற்போதைய பீஜேபி ஆட்சியோ அழகாக அச்சடிக்கப்பட்ட ஆயிரம் ஐநூறு  நோட்டை மாற்றி நாட்டை வளர்ச்சி பாதையில் இருந்து  நாசமாக்கி விட்டனர் என்பதே
சாதனை (?)

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்