பெண்ணிண் பருவ துளிர்
பெண்ணிண் பருவ துளிரும்
குடும்பத்தாரின்
பாரங்களும்
[][][][][][][][][][][][][][][][][]
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
கட்டுரை எண் 1311
********
குடும்பத்தில் செல்ல பிள்ளையாக இருக்கும் ஒரு பெண் பருவ வயதை அடையும் போது அவளை ஈன்ற தாய் அப்போது தான் தனது தாய்மையின் முழு உணர்வை அடைகிறாள்
அதை அறியும் தந்தையோ அப்போது தான் தானும் ஒரு குடும்ப தலைவன் என்பதை உலவியல் ரீதியாக உணர துவங்கி தனது கடந்த கால இளமை நினைவுகளை பிள்ளையின் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறான்
அதை அறியும் அப்பெண்ணிண் அண்ணணோ தன் மீதும் ஏதோ ஒரு பாரம் இருப்பதை மனரீதியாக சற்று நேரம் அறிய தொடங்கி தானும் ஒரு முதிர்சி அடைந்த ஒருவனாய் சிந்திக்க துவங்குகிறான்
தாயுக்கும் தந்தைக்கும் தனது இதயத்தில் தனி இடம் இருப்பதை போல் அதில் மூன்றாம் இடம் காலியாக இருப்பதை அப்பெண் நாளடைவில் சூழ்நிலைகளால் அறிய துவங்குகிறாள்
அந்த இடத்தில் குடி வருபவன் எவனோ அவனே தனது எல்லா உறவுகளையும் விட மேலான உறவு என்ற நிலைக்கு அவளது கற்பனை வடிவிலும் அவளது நட்புகள் மூலமும் சிந்தை மாற்றப்படுகிறாள்
அதன் விளைவே பெற்றோர்களுக்கும் தெரியாது அந்நியனை தனது இதயத்தில்
அவள் வாலிபம் நாடும் நபரை பார்த்து குடியேற வைக்க வாசலை திறக்கிறாள்
அல்லது அவள் பருவம் நாடும் நபரே அவளது இதயத்தில் ஒரு கதாநாயகன் போல் குடி அமர்கிறான்
அவளது படிப்பும் வாங்க இருக்கும் உலக பட்டமும் சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்று தரும் என்ற கனவில் பெற்றோர்கள்
அவளுக்கு போடப்பட்டிருந்த வேலியை கண்காணிப்பதை இரண்டாம் நிலைக்கு தள்ளி கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தை அவர்களது மகளுக்கு சற்று விசாலமாக்குகின்றனர்
இதன் விளைவு தான் அவர்களின் வாழ்வில் அவமானங்கள் ஏமாற்றங்கள் இழப்புகள் விபத்துகளை போல் ஏற்பட துவங்குகிறது
ஈமானிய சிந்தனையுடன் உலகியல் ஆபத்துகளையும் நடைமுறை ரீதியாக உட்கொண்ட பெற்றோர்கள் அப்பெண்ணையும் நல்வழி படுத்தி நாட்களை கடத்தி சென்றால் அவளை ஈன்றதற்கான இன்பத்தையும் நற்பெயரையும் நிச்சயம் வாழ்வில் காணுவார்கள்
உடலியல் ரீதியாக கட்டி அனைத்து பாசத்தோடு குலவிய அப்பெண்ணிண் தந்தை பண்பாடுகளால் அவன் ஈன்ற மகளின் உடலை விட்டு சற்று விலகினாலும் அவளது எதிர்கால வாழ்கை சிந்தனையை மூட்டையாய் சுமக்க வேண்டிய நிலையை நினைத்து பயம் கலந்த பாசத்தோடு அவனது பொருளியில் பாரத்திலும் கூட்டு சேர அப்போது தான் அவன் ஈன்ற மகனின் துணையை எதிர்பார்த்து ஊமையாக நடித்து கற்பனை வீட்டை அவனுக்குள்ளே எழுப்புகிறான்
தந்தையின் எதிர் கால கற்பனை வீட்டை நிஜத்தில் வடிவம் தர வீரியமாக உழைக்கும் எண்ணத்தை பெற்று அந்த இலட்சியத்தை நோக்கி இளமையில் பயணிக்கும் மகனே அந்த குடும்பத்தின் எதிர் கால தூணாக விளங்குகிறான்
கணவனின் கால் போனாலும் மகனின் கைகள் உள்ளதே என்ற ஓர் உறுதுணை நம்பிக்கை அவனது தாயுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது
உதிரத்தை உரமாக்கி சோறூட்டிய தாய் அவனது மகன் தரும் மாத சம்பளத்தை செங்கலாக்கி பருவ வயதை அடைந்த மகளுக்கு வாழ்கை துணை கட்டிடடத்தை கட்டி கொடுக்க எண்ணத்தில் அஸ்த்திவாரம் எழுப்புகிறாள்
இதில் எவ்விதமான பாரமும் இல்லாமல் பருவ வயதை அடைந்த உடன் பிறப்போடு அன்பான கேலியும் கிண்டலும் செய்து அக்காவுக்கு தங்கையாக மட்டும் இருக்கும் ஒரே ஜீவன் தங்கை மட்டுமே
*******
2408. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்ற கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உறவுகளின் உரிமைகளை) நிறைவேற்றாமல் ( கவனமற்று ) இருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும்
அதிகமாக ( அவசியமற்ற ) கேள்விகள் கேட்பதையும் செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்
என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்
நூல் ஸஹீஹ் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment