குடியுரிமை

     மனித நேயத்தில் பேதமையை   
            அரங்கேற்றிய பீஜேபி 
       
            ***********************

                        
குடியுரிமை திருத்த சட்டத்தை முஸ்லிம்கள்  தவறாக புரிந்து விட்டதாக  கூறி அதை பற்றிய விளக்க பொது கூட்டங்களை நடத்தப்போவதாக பீஜேபி கட்சி நாட்டு மக்களின் காதில் தொடர்ந்து  பூவை சுற்றுகிறது

நோட்டை மாற்றினால் நாட்டை மாற்ற முடியாது என்பதை நாட்டு மக்கள் ஏற்கனவே  அறிந்து தான் இருந்தனர்
ஆனால் தரமான நோட்டை செல்லாததாக அறிவித்து அதற்கு பதிலாக கலர் நோட்டை வகை வகையாக அச்சடித்து அதனால்  இந்தியாவின் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய பீஜேபி அரசாங்கம் தான் நோட்டை மாற்றியதின் விளைவை மிகவும் தாமதமாக உணர துவங்கியது

குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் பீஜேபி கூட்டணி கட்சிகளுக்கும் முஸ்லிம்களோடு கரம் கோர்த்து நாடு முழுவதும் போராடும் முஸ்லிம் அல்லாத இந்து மற்று இதர சமுதாய மக்களுக்கும் குடியுரியை திருத்த சட்டத்தின் நன்மைகளை  தெளிவாக விளக்கி விட்டு அதன் மூலம் அவர்களுக்கும் மனமாற்றத்தை ஏற்படுத்தி விட்டு அதன் பிறகு முஸ்லிம் சமூகத்திற்கு விளக்க பொதுக்கூட்டம் தனது நியாயத்தை நிலை நாட்டட்டும்

பிஜேபி கூற்றுப்படி நாட்டு மக்களே சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒரு தந்திர சட்டத்தை கொண்டு வந்து விட்டு அதை சரியான சட்டம் என்று பிதற்றுவது ஏமாற்று வேலையாகும்

இவ்விசயத்தில் நீதிக்காக போராடும் இந்திய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உயிர்களில் இது வரை இருபது உயிர்கள் மத்திய அரசால் பறிக்கப்பட்டு

அந்நிய நாடான பாகிஸ்தான் மண்ணில்  இருந்து வருகை தந்த மூன்று இந்துக்களுக்கு இந்திய குடியுரிமையை குஜராத் பீஜேபி அரசாங்கம் வழங்கியுள்ளது

குடியுரிமை கொடுத்தால் ஒரு மதத்தின்  சிந்தனையை தவிர்த்து  விட்டு மதநல்லிணக்க அடிப்படையில் அனைத்து அகதிகளுக்கும் ஆய்வு செய்து குடியுரிமை கொடுங்கள்

அல்லது அனைவரையும் அகதிகளாக மாத்திரம் கருதுங்கள் என்பதே ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் குரல்

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌  اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏ 

இறைநம்பிக்கையாளர்களே ! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்

எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்
நீதி செய்யுங்கள்  பயபக்திக்கு மிக நெருக்கமாகும்

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்

            (அல்குர்ஆன் : 5:8)

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்