ஜமாத்தார்கள் கவனத்திற்கு
சமுதாய தலைவர்கள் உலமாக்கள்
இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை
அங்கத்தவர்களுக்கு
வேண்டுகோள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
NB இந்த பதிவின் நியாயத்தை புரிந்து இதை அனைவருக்கும் எத்தி வைப்பீர் - .இது படிக்கும் பதிவு அல்ல மாறாக பரப்பும் பதிவு
*************
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
CAA NRC சட்டத்தின் அதிருப்தியை தெரியபடுத்துவதற்கு பலகட்ட ஜனநாயக போராட்டங்களை நியாயவான்கள் துவக்கத்தில் வெளிப்படுத்தினாலும்
அவை பலன் தராத பட்சத்தில் நாளடைவில் மக்களும் போராட்டங்களில் சோர்ந்து அதன் தலைவர்களும் வீரியம் குறைந்து செயல்படுவார்கள் என்பது அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் நம்மை விட அறிந்து வைத்துள்ள விடயம் தான்
அதே கண்ணோட்டம் தான் குடியுரிமை திருத்த மசோதா சட்ட வாபஸ் எதிர்ப்பு போராட்டத்திற்கும் இருக்கும்
இந்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் சமுதாய தலைவர்கள் இஸ்லாமிய ஜமாத்துகள் சிறுபான்மை கட்சிகள் மற்றும் உலமாக்கள் இவ்விசயத்தில் தங்கள் அதிருப்தியை எவ்வாறு மக்கள் சலிக்காத விதத்தில் உத்வேக படுத்த வேண்டும் என்பதையும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதையும் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டும்
காரணம் போராட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளை போல் பல கோடிகளை கைகளில் பேன்ங் லாக்கர்களில் வைத்து கொண்டு சுற்றுவது இல்லை
மாறாக அன்றாடம் உழைத்தால் தான் தங்கள் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான்
எனவே மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்கள் தொடர்ந்து செய்து வரும் வணிகத்திற்கும் இடையூறு இல்லாத விதத்தில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிமுறைகளை உடனடியாக கண்டறிய வேண்டும்
குறைந்த பட்சம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல் படுத்தும் நிலையில் உள்ள மாநிலங்களின் ஆட்சியாளர்களுக்கு அதன் விளைவை புரிய வைத்து அந்த சட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால் கூட மாநிலத்தில் வளர்ச்சி கட்ட பணிகள் தொய்வடையும் என்பதையும் அதனால் ஓட்டுக்களை இழக்கும் நிலையை சந்திக்க நேரிடும் என்பதையும் வீரியமாக எத்தி வைக்க வேண்டும்
அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையின் மூலம் அச்சுறுத்தல் மூலம் நாட்டு மக்கள் இவ்விசயத்தில் பின்னடைய மாட்டார்கள் என்பதையும் அவ்வாறு பின்னடைவார்கள் என்று நினைப்பதும் கூட இவ்விசயத்தில் ஆட்சியாளர்களின் மடமை என்பதையும் ஜனநாயக ரீதியில் எத்தி வைக்க வேண்டும்
இந்தியா சுதந்திரம் அடையும் நேரத்தில் யார் எல்லாம் நம் நாட்டில் அப்போது இருந்தார்களோ அவர்களின் சந்ததிகளில் ஒருவரை கூட இந்தியாவில் இருந்து அந்நியப்படுத்தும் அதிகாரம் எந்த அரசியல்வாதிக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடுகளவும் தகுதி இல்லை என்பது தான் இந்திய அரசியல் சாசனத்தின் குடியுரிமை சட்டம் நமக்கு அழகாக சொல்லி தருகிறது
அந்த சட்டத்தில் கைவைத்து இந்தியாவின் இறையாண்மையை சிதைக்க நினைக்கும் எவரையும் நாங்கள் இந்தியனாக மட்டும் அல்ல மாறாக மனித இனத்தின் பிறவியாக கூட மதிக்க மாட்டோம்
இந்தியா எங்கள் தாய்நாடு
அதை மறுப்பவன்
அறிவற்ற எறுமை மாடு
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும்
இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்
(அல்குர்ஆன் : 3:104)
நட்புடன் இந்திய குடிமகன்
J . இம்தாதி
Comments
Post a Comment