பீஜேபி நாடகம்
குடியுரிமை ஆதரவு ஊர்வல நாடகம்
அரங்கேற்றும் பீஜேபி கட்சி
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1306
**********
ஆட்சியாளர்கள் தங்களை அடக்கு முறை செய்வதாக குடிமக்கள் கருதும் போது அல்லது அவர்களால் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக கருதும் போது அல்லது தங்களை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பதாக கருதும் போது தங்களின் அதிருப்தியான உணர்வுகளை சட்ட ரீதியாக வெளிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள உரிமை தான் போராட்டம் ஆர்ப்பாட்டம் பேரணி உண்ணாவிரதம் போன்றவை
ஆட்சியாளர்கள் குடிமக்கள் விரும்பும் விதம் நடந்து கொண்டிருக்கும் போது அல்லது குடிமக்கள் விரும்பும் விதம் சட்டத்தை அரங்கேற்றும் போது அது போன்ற நிகழ்வுகளுக்கு நன்றி உணர்வை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவது தான் நன்றி பொது கூட்டங்கள் பாராட்டு பொது கூட்டங்கள்
நன்றியை வெளிப்படுத்தவும் ஆதரவை வெளிப்படுத்தவும் பொருத்தமற்ற வழிகளை எவரும் தேர்வு செய்ய மாட்டார்கள்
இந்த பொதுஅறிவு கூட இல்லாமல் குடியுரிமை சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் எனும் பெயரில் பீஜேபி கட்சியை சார்ந்தோர் நாட்டில் சில இடங்களில் குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் போராட்டம் ஊர்வலம் செல்லும் மக்களை எதிர்க்கும் விதமாக சென்று கூட்டங்களை நடத்தி கொண்டுள்ளனர்
இந்திய வரலாற்றில் அரசின் போக்கை கண்டித்து ஜனநாயக ரீதியில் போராட்டம் செய்யும் குடிமக்களை எதிர்த்து மறு போராட்டம் நடத்தும் ஒரே கட்சி பீஜேபி என்பது தான் நகைப்பாக உள்ளது
இதில் வேதனையான விசயம் என்னவெனில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டில் வாழும் பல தரப்பட்ட மக்களும் மாநிலங்களை ஆளும் முதல்வர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றனர்
ஆனால் பீஜேபி கட்சியோ அவர்களே நடத்தும் குடியுரிமை ஆதரவு ஊர்வலங்களுக்கு அவர்களை சார்ந்த சமூகத்தவர்களும் கூட
ஏன் அந்த கட்சியின் உறுப்பினர்கள் கூட பலர்கள் கலந்து கொள்வது இல்லை
சமீபத்தில் சென்னையில் H ராஜா பங்கு கொண்ட குடியுரிமை ஆதரவு பொதுக்கூட்டத்தில் இரு நூறுக்கும் குறைவான நபர்கள் பங்கு கொண்டதை விட தமிழகத்தில் பீஜேபி கட்சிக்கு அவமானம் இல்லை அதாவது தமிழகத்தில் உள்ள பீஜேபி கட்சியை சார்ந்தோர் கூட பரவலாக அவர்களின் கூட்டங்களில் பங்கு கொள்வது இல்லை
பீஜேபி கட்சி பார்வையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்க வேண்டிய பொதுவான இந்து சமுதாயத்தவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட அவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் அறவே பங்கு கொள்வது இல்லை
குடியுரிமை திருத்த சட்டத்தில் திணிக்கப்பட்ட மத ரீதியான பாகுபாடுகளையும் பீஜேபி கட்சியின் நரித்தந்தரங்களையும் தான் குடிமக்கள் எதிர்க்கின்றார்களே தவிர வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் வரும் அகதிகள் எவருக்கும் குடியுரிமை தர கூடாது என்பதற்காக குடிமக்கள் எவரும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை என்பதை கூட ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களும் சிந்திக்கவில்லை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment