உலமாக்களின் உரிமை குரல்
உலமாக்களின் சுதந்திர குரல்
ஆழம் நிறைந்தது
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
கட்டுரை எண் 1306
**********
இந்திய திருநாட்டில் பல காலமாக பள்ளிவாசலில் ஆன்மீகத்தை பேசி கொண்டிருந்த உலமாக்களை இன்று இந்தியாவின் கடை வீதிகளில் தெரு ஓரங்களில் அரசியல்வாதிகளின் கயமைத்தனத்தை பேசும் நிலைக்கு தள்ளிவிட்ட மத்திய அரசே
உலமாக்களின் குரல் சாந்தமானது ஆனால் சாதுர்யமானது
வீரியம் குறைந்தது ஆனால் விவேகம் நிறைந்தது
நீங்கள் கடந்து செல்லும் நடிகர் நடிகைகளின் பேட்டிகளை
போல் அல்லது அரசியல்வாதிகளின் நிறம் மாறும் மேடை பேச்சுக்களை போல் இஸ்லாமிய உலமாக்களின் மேடை பேச்சுக்களை கணித்து விட வேண்டாம்
மற்ற மதங்களில் ஆன்மீகவாதிகள் தோற்றத்திற்கு தான் மதிப்பு உண்டு
ஆனால் இஸ்லாமிய ஆன்மீகத்தை போதிக்கும் உலமாக்களிடம் அவர்களின் இஸ்லாமிய அறிவுரை சொல்லுக்கு தான் மதிப்பு
சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளையனை விரட்டுவதற்கு அவன் மீது வெறுப்பை ஏற்படுத்த வெள்ளையன் பேசும் ஆங்கில மொழியை படிப்பதும் கூட அந்தசூழலில் ஹராம் ( தடுக்கப்பட்டது )என்று சுதந்திர வெறியை அனல் பறக்க பேசியவர்கள்
அதன் மூலம் இந்திய மக்களை அடிமை படுத்திய வெள்ளையனை நம் நாட்டில் இருந்து விரட்ட உரம் போட்ட சுதந்திர தியாகிகளில் இஸ்லாமிய உலமாக்களின் பங்கை வரலாறு பேசுகிறது
சுதந்திர இந்தியாவில் ஆன்மீக போதனையின் பக்கமே திரும்பிய உலமாக்களை மீண்டும் ஜனநாயக சுதந்திரத்தின் பக்கம் திசை திருப்பாதீர்கள்
உலமாக்கள் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைப்படி எதிர்த்து அதன் விளைவுகளை அறிவுப்பூர்வமாக விளக்கி அறவழியில் குடிமக்களுக்கு தெளிவை தந்து கொண்டுள்ளனர்
இதில் பல கட்ட போராட்டங்களுக்கு பின்னும் உங்கள் செவிகள் செவிட்டு தன்மையை சுமந்தால் அதனால் விரக்தியடையும் நாட்டு மக்களுக்கு பொறுமையை உலமாக்கள் வலியுருத்தும் வரை தான் முஸ்லிம் சமுதாயம் அறப்போராட்டம் செய்யும்
என்பதை கவனத்தில் வைத்து செயல்படுங்கள்
இந்தியா சர்வாதிகார நாடு அல்ல சர்வத்தையும் மக்களே முடிவு செய்யும் தகுதியை சாசனமாக தன்னில் சுமக்கும் அழகான மதசார்பற்ற ஜனநாயக நாடு இந்தியா
இந்திய வரலாற்றில் உலமாக்கள் மற்றவர்களின் உரிமையை பறிக்க போராட்டம் நடத்தியதும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை
மாறாக உலமாக்கள் தங்கள் சமூகத்திற்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை தான் போராடி கேட்டு கொண்டுள்ளனர்
உலமாக்களின் குரலை சிதைக்காதே அவர்களின் குரலை குறைத்து மதிக்காதே அது மறு சுதந்திர பாதைக்கு வித்திடும் நிலையை ஏற்படுத்த கூடும் என்பதை மீண்டும் நிலை படுத்துகின்றோம்
நீங்கள் உருவாக்கிய கற்பனை முல்லாக்கள் கதைகளை தான் பேசுவார்கள் இஸ்லாமிய உலமாக்கள் மூடிமறைக்கப்பட்ட இந்திய வரலாற்றையும் அதன் காரணிகளையும் தியாகிகளையும் பேசுவார்கள் என்பதை இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள்
இது ஆட்சியை பிடிக்கும் அரசியல் வேடதாரிகளின் குரல் அல்ல
மாறாக ஆன்மீகவாதிகளின் மனிதநேய குரல்
மனிதநேயவாதிகளின் இரும்பு குரல்
மத சார்பற்ற நாட்டின் குடி மக்களின் உரிமை குரல்
عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، اَلْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள் உங்களில் ஒவ்வொருவரிடமும் (அவருக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி) விசாரிக்கப்படும்
அரசன் பொறுப்பாளன் அவரிடம் அவரது குடிமக்களைப்பற்றி விசாரிக்கப்படும்
குடும்பத் தலைவன் தனது வீட்டாருக்குப் பொறுப்பாளன் அவரிடம் அவரது வீட்டாரைப்பற்றி விசாரிக்கப்படும்
பெண் தன் கணவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாளி அவளிடம் அவ்வீட்டில் வசிக்கின்ற குழந்தைகள் போன்றோரைப் பற்றி விசாரிக்கப்படும்
வேலைக்காரர் அவரது முதலாளியுடைய பொருளுக்குப் பொறுப்பாளர் அவரிடம் அவருடைய முதலாளியின் உடமைகள் செல்வங்களைப் பற்றி விசாரிக்கப்படும்
மகன் அவனுடைய தந்தையுடைய பொருளுக்குப் பொறுப்பாளன் அவனிடம் அவனது தந்தையுடைய பொருளைப்பற்றி விசாரிக்கப்படும்
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் பற்றி விசாரிக்கப்படும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment