2020 புத்தாண்டு சாதனையா வேதனையா
புத்தாண்டு சாதனையா
வேதனையா
2020
[][][][][][][][][][][][][][][][][]
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
கட்டுரை எண் 1308
********
ஊரே ஒன்றை சொன்னால் அதை நாமும் சேர்ந்து சொல்வோம் என்பது தான் புத்தாண்டு
புத்தாண்டு என்றால் என்ன ?
பழைய ஆண்டுக்கும் புத்தாண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
ஒரு ஆண்டை மகிழ்வோடு வரவேற்பதால் அதனால் ஏற்படும் மாற்றம் என்ன ?
அல்லது இத்தனை வருடமாக புத்தாண்டை வரவேற்று என்ன மாற்றத்தை கண்டுள்ளீர் ?
புத்தாண்டு இரவு 12 மணியானால் பட்டாசு வெடித்து சுற்று சூழலை நாசமாக்கி காசை கரியாக்குவது
குடிக்காதவனுக்கும் மகிழ்சி எனும் பெயரில் குடியை கற்று கொடுத்து அவன் குடும்பத்தையும் சேர்த்தி நாசமாக்குவது
நள்ளிரவு நேரம் நாய்கள் ஊளையிடுவதை போல் இரவு 12 மணி ஏற்படும் போது ஒன்று கூடி ஊளையிட்டு ரணகளம் செய்வது
ஆடல் பாடல் பெயரில் ஒழுக்க கேடுகளை விபச்சாரங்களை அம்பலப்படுத்தி மனித சமுதாயத்தையே கீழ்நிலை சமுதாயமாக மாற்றுவது
இதை தவிர வேறு என்ன பலன் ?
ஒரே ஒரு நன்மையை மாற்றத்தை ஆயிரம் முறை சிந்தித்து சொல்லுங்கள் பார்ப்போம்
இதற்கு உன்னால் விடை சொல்ல இயலவில்லையானால் உன்னை விட சிந்தனையற்றவன் எவரும் இல்லை
நீ வாழப்போகும் நாள் குறைந்து
நீ சாகப் போகும் நாள் நெருங்கி விட்டது என்பது தான் குறைந்த பட்சம் புத்தாண்டு தரும் போதனை
சாவை மறந்து கும்மாளம் போட்டு
நீ புத்தாண்டை எதிர் கொண்டால் உன்னை விட கால்நடைகளே மேல் காரணம் கால்நடைகள் எதுவும் இந்த கீழ்நடைகளை உலகம் துவங்கிய நாள் முதல் 2019 வரை அரங்கேற்றியது இல்லை இனியும் அரங்கேற்றம் செய்யப்போவது இல்லை
உலகில் புத்தாண்டு கொண்டாட துவங்கிய காலம் முதல் 2019 வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேதனையை தான் ஏற்படுத்தியுள்ளதே தவிர சாதனையை ஏற்படுத்தியதே இல்லை
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான் அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்
உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள்
அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை
(அல்குர்ஆன் : 6:61)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment