படித்தவர்களா பாமரர்களா

      படித்தவர்களா  பாமரர்களா
          குடிமக்களின் விரக்தி

       சிறுவன் சாவு தந்த பாடம்
                🚧 🚧 🚧 🚧 🚧
    31-10-19 J . Yaseen iMthadhi
                    
           **********************                      
            கட்டுரை எண் 1277
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                       !!!!!!!!!!!!!!!!!

ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் அறிவியல் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அங்கு வாழும் படித்தவர்களின் பங்கு அரசாங்த்திற்கு பயன் தருகின்ற விதத்தில் அமைந்தால் மட்டுமே  முதலிடம் வகிக்க முடியும்

அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் இந்த விசயத்தில் முன்னோடியாக இருப்பதால் தான் அது போன்ற நாடுகள் வல்லரசாக மாற முடிந்தது

சிறுவன் சுஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து காப்பாற்ற சரியான தொழில் நுட்பத்தை முன்னேற்பாடாக வைத்திருக்காத காரணத்தால் தான் அந்த சிறுவனை காப்பாற்ற எடுக்கப்பட்ட பல கட்ட முயற்சிகளும் தோற்று போனது

இதை மிகவும் தாமதமாக உணர்ந்த அரசாங்கம் ஆழ்துளை  கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க சரியான கருவியை கண்டு பிடித்து தருவோருக்கு ஐந்து இலட்சம் பரிசு தொகையை அறிவித்தது

இப்போதாவது நம் அரசாங்கத்திற்கு உணர்வு ஏற்பட்டதே என்ற மகிழ்சியில் குடிமக்கள் இருக்கும் சூழலில்

அந்த அறிவிப்பை ஏற்று  இதுவரை அது தொடர்பான தொழில் நுட்பத்தை படித்து  பட்டம் பெற்றோரும்
அல்லது அந்த  தொழில் நுட்பத்தை பயின்று கொண்டிருப்போரும்
அது தொடர்பான கல்விச்சாலையை நடத்தும் கல்லூரிகளில் எந்த ஒன்றும் அந்த கருவியை கண்டு பிடித்து தர நாங்கள் தயார் என்று இதுவரை அறிவிப்பு தர முன்வரவில்லை

அந்தளவுக்கு தான் தமிழகத்தில் படித்தோரின் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என்று நினைத்து தலைகுனிவு ஏற்பட்டுள்ளது

அரசாங்கம் தொடர்பான வேலையில் அமருவதற்கு பல கட்ட முயற்சிகளை செய்யும் படித்தோர் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரத்தில் பாமரர்களாக இருப்பது படித்தோர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது

இந்நிலை நீடித்தால் அரசாங்கத்தின் மீதும் படித்தோர் மீதும் இருக்க கூடிய கண்ணியத்தை இழக்கும் சூழலே ஏற்படும்

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏ 

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான் (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்

எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை

         (அல்குர்ஆன் : 2:269)

          நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்