ஆள்துளை கிணறு

        ஆழ்துளை ஆபத்துகளும்
       குடிமக்களின் கடமைகளும்
   *********************************
                            ﷽
                      !!!!!!!!!!!!!!!!!
      26-10-19 Yaseen iMthadhi
                    ••••••••••••••••

வாங்குகின்ற ஊதியத்திற்கு ஏற்று தங்களது பணிகளை அரசாங்க ஊழியர்கள் சரியாக செய்தாலே நாட்டில் ஏற்பட்டு வரும் பலவிதமான ஆபத்துகள் உயிர் இழப்புகளை நிச்சயமாக தடுக்க இயலும்

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுவதும் அதனால்  ஊனமாவதும் உயிர் இழப்பதும்  இப்போது திடீரென்று திருச்சியில் நடந்த ஒரு அசம்பாவிதம் அல்ல

இதே போல் கோர சம்பவம் பல முறை நம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது 

ஒரு விளைவு ஏற்படும் போது மாத்திரம்  அதை பற்றி  பரபரப்பாக பேட்டிகள் எடுப்பதும் விவாதிப்பதும் தொலைகாட்சிகளின் வாடிக்கையாகி விட்டது

இது வரை தொலைகாட்சியில் நடைபெற்ற விவாதங்களில் எத்தனை  பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது

தெருவில் நடக்கும் போது கண்ணால் பார்க்கும் அரசாங்க குறைபாடுகளை அதற்குரிய அதிகாரிகளுக்கு முறையாக எத்தி வைக்காமல் நமக்கென்ன இதனால் இழப்பு என்று  மக்கள் கடந்து செல்வதே இது போன்ற விளைவுகள் தொடர்வதற்கு மூல காரணம்

வீட்டு வரி குடிநீர் வரி கடை வரி நிலம் வரி மற்றும் நமது இதர வரிகளை கட்டுவதற்கு மாத்திரம் பஞ்சாயத்துகள் அல்ல
மாறாக நமக்கு ஏற்பட்டுள்ள குறைகளை எத்தி வைப்பதற்கும் ஏற்படுத்தப்பட்டது தான் இவைகள்

இவைகளை மக்களும் உணர வேண்டும் அரசாங்க ஊழியர்களும் உணர வேண்டும்

மக்கள் தரும் வரிப்பணத்தில் மாதம் தவறாமல் சம்பளத்தை பெறும் அரசாங்க ஊழியர்கள் அவர்களுக்கு உரிய கடமைகளை சரியாக நிறைவேற்றாது சம்பளம் பெறுவதை பிச்சை எடுப்பதை விட கேவலமாக கருத வேண்டும்

டிஜிடல் இந்தியா என்று பெருமை பேசும் அரசாங்கம் ரோடுகளில் ஏற்படும் விபத்துகளை விபரீதங்களை சீர் செய்யாமல் விபத்துகள் உயிர் இழப்புகள் ஏற்படும் போது குடிமக்களை போல் வருத்தம் தெரிவிப்பதும் நஷ்ட ஈடு வழங்குவதும் மக்களை ஏமாற்றும் வித்தையாகும்

عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قُلْتُ: يَارَسُولَ اللهِﷺ أَلاَ تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَي مَنْكِبِي، ثُمَّ قَالَ: يَا أَبَا ذَرٍّ إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةٌ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا وَأَدَّي الَّذِي عَلَيْهِ فِيهَا
நான் நபி (ஸல்) அவர்களிடம் யாரஸூலல்லாஹ், தாங்கள் ஏன் என்னை பதவியில் நியமிப்பதில்லை? என வினவினேன் நபி (ஸல்) அவர்கள் தமது கையால் என்னுடைய தோள் மீது தட்டிக் கொடுத்தவாறு

அபூதர்ரே நீர் பலவீனமானவர்! பொறுப்பு என்பது நம்பிக்கையோடு செய்யும் சேவையாகும்
(இதில் அடியார்களுக்குரிய கடமைகள் சம்பந்தப்பட்டுள்ளன) மேலும்(பொறுப்பு) கியாமத் நாளன்று இழிவுக்கும், கைசேதத்திற்கும் காரணமாக ஆகிவிடும்
எவர் இந்தப் பொறுப்பை சரியான முறையில் ஏற்று அதற்குரிய முறையில் நிறைவேற்றினாலே தவிர, (பிறகு இந்த அமீருடைய பொறுப்பு) கியாமத் நாளில் இழிவிற்கும், கேவலத்திற்கும் காரணமாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                நூல்  முஸ்லிம்

           நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்