தீய பண்பாடு

                    தீய பண்பாடு
            **********************   
                       24-10-19
            கட்டுரை எண் 1274
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                     !!!!!!!!!!!!!!!!!

சிந்தனையில் செயல்பாட்டில் திறமையான ஒரு மனிதனை  அரவணைத்து அவனை வாழ்வில் ஏதாவது ஒரு வகையில்  முன்னேற்றி விடுதல் என்பது ஒரு நல்ல பண்பாடு

அதே மனிதனை பொறாமையின் காரணமாக அனைத்திலும் பின்னோக்கி தள்ளுவது என்பது
தீய பண்பாடு

இந்த இரண்டாம்  கீழ்நிலை குணம்  அநேகமான நபரிடம் அவர்களை அறியாமலேயே குடிகொண்டுள்ளது குறிப்பாக சில படித்தோரிடம் ஆலீம்களிடமும் இந்த தீய பண்பாடு நிறைந்துள்ளது

இந்த தீய குணாதிசயம் தான் ஒரு மனிதனின் எதார்த்த நிலையை பலர்களுக்கு புரிய வைக்கிறது

அறிவு சிந்தனை புகழ் போன்ற யாவும் இறைவன் தீர்மானித்து ஒரு மனிதனுக்கு வழங்கும் பாக்கியம்  என்ற சாதாரண பகுத்தறிவு கூட இல்லாது இருப்பது சாத்தானின் சூழ்சிகளுக்கு உட்பட்ட காரியம்

அல்லது அந்த மனிதனை விட எல்லாவற்றிலும் நான் முன்னோடி என்ற தகுதிகளையாவது இவர்கள் வளர்த்தி கொள்ள முன் வர வேண்டும்

நான் மட்டும் முன்னேற வேண்டும் மற்றவர்கள் முன்னேற கூடாது என்ற குணமும்

நான் முன்னேற்றம் அடைந்த அளவுக்கு மற்றவர்கள் முன்னேற கூடாது என்ற குணமும்

மனிதனை தீயவனாக்குகிறது

இதை ஒவ்வொருவரும் தனது மனசாட்சியில் கை வைத்து கேட்டு பார்த்தால் அவர்களுக்குள் சாத்தான் ஒளிந்திருப்பதை அவர்களே அறிந்து கொள்வர்

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌  وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌  وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏ 

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்

         (அல்குர்ஆன் : 4:85)

وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِ‌  فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْيًا بَيْنَهُمْ‌ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏ 

அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம் எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்
நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்

         (அல்குர்ஆன் : 45:17)

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்