அறிவை வைத்து ஈமானை எடை போடலாமா
அறிவை வைத்து ஈமானை
எடை போடுவதும்
வழிகேடே
♦♦♦♦♦♦♦♦♦♦
22-07-19
கட்டுரை எண் 1256
!!J . Yaseen iMthadhi !!
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு
மனிதனின் அறிவுக்கு புலப்படாத பகுத்தறிவும் ஏற்று கொள்ளாத பல தகவல்களையும் உள்ளடக்கியது என்பதை நாம் மறந்து விட கூடாது மறுத்தும் விட கூடாது
அதே நேரம் அது போன்ற செய்திகள் மனிதனின் வாழ்விற்க்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதையும் இணைத்தே நினைவில் வைக்க வேண்டும்
மனிதனின் பகுத்தறிவுக்கு ஏற்ற நிலையில் இறைவனால் அனைத்து செய்திகளையும் சொல்ல முடியாது என்பது இதன் காரணம் அல்ல
மாறாக மனிதனின் பகுத்தறிவையும் மிஞ்சிய வல்லமை தனக்கே உண்டு என்பதை பறை சாற்றுவதற்காகவும்
அது போல் செய்திகளை நம்புவதின் மூலம் இறை நம்பிக்கையை நாம் அதிகப்படுத்தி கொள்வதற்காகவும் தான் இறைவன் அறிவுக்கு புலப்படாத பல செய்திகளையும் வடிவமைத்தே இஸ்லாத்தை நமக்கு மார்க்கமாக வழங்கி இருக்கிறான்
அவ்வாறு ஏற்று கொள்வதற்க்கு பெயர் தான் ஈமான் எனும் இறை நம்பிக்கையாகும்
உதாரணமாக இறைவனால் படைக்கப்பட்ட
1ஜின்களை நம்புவது 2வானவர்களை நம்புவது 3கப்ரு வாழ்வை நம்புவது 4சொர்கம் நரகம் போன்ற மனிதனின் கண்களால் காண இயலாத படைப்புகளை நம்புவதும் ஈமான் என்றே இஸ்லாம் போதிக்கிறது
இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை பகுத்தறிவு ரீதியாக ஆணித்தரமாக ஒருவன் நம்பிவிட்டால் அவனுக்கு இது போன்ற நம்பிக்கை சார்ந்த விசயங்களை ஏற்று கொள்வது எந்த விதமான சலனத்தையும் ஏற்படுத்தாது
அதனால் தான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மட்டும் மனிதனின் பகுத்தறிவு ஏற்று கொள்ளும் விதத்தில் மறுக்க முடியாத பல சான்றுகளை வாதங்களை திருக்குர்ஆன் மூலம் சொல்வதோடு
அவைகளை உண்மை என்று நம்பு விதத்தில் பல நடைமுறைகளையும் இந்த பிரபஞ்சத்தில் ஏற்படுத்தியே உள்ளான்
ஒரு நம்பிக்கையை எந்த முறையில் ஏற்க வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கற்று தந்தார்களோ அவைகளை அப்படியே ஏற்று கொள்வதற்க்கு பெயர் தான் ஈமானே தவிர ஈமானிய நம்பிக்கையில் தர்கிப்பதை விதண்டாவாதம் பேசுவதை அது தொடர்பான ஆதாரமான செய்திகளை மறுப்பதை ஈமான் என்று சொல்ல முடியாது அதற்கு பெயர் தான் குப்ர் என்ற இறை நிராகரிப்பாகும்
இஸ்லாத்தை மறுக்கும் நபர்களை விட இஸ்லாத்தை ஏற்று கொண்ட நிலையில் இது போல் செய்திகளை மறுப்பது தான் கடுமையான தண்டனைக்கு உரித்தான ஒன்றாகும்
اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْکُمْ اِلَّا خِزْىٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா ?
எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள் இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை
(அல்குர்ஆன் : 2:85)
இந்த உண்மையை சரியாக புரிந்து கொள்ளாததின் விளைவாக தான் ஹதீஸ்களை முற்றிலும் மறுக்கும் அஹ்ல குர்ஆன் எனும் வழிகேடு தோன்றியது
இன்று அதே வழிகேடுகளை படிப்படியாக பின்பற்றும் சிந்தனையை சாத்தான் ஏகத்துவவாதிகளிடமும் திணித்து விட்டான்
அதனால் தான் ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீசை மறுக்கும் போது அந்த ஹதீசை யார் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் போல் இட்டு கட்டியது ? எதன் வழியாக இட்டு கட்டி சொன்னார்கள் என்ற தெளிவான விளக்கம் கூறாமலேயே சஹாபாக்கள் நேரடியாக அறிவிக்கின்ற பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட மறுக்கும் வழிகேடு இன்று வஹி எனும் பெயரில் ஏகத்துவவாதிகளிடம் வலம் வந்து கொண்டுள்ளது
நபி ( ஸல்) அவர்கள் சொன்ன சொல் தான் என்று தெளிவாக தெரிந்து விட்டால் அதை தங்களது பகுத்தறிவு ஏற்காது போனாலும் பலமாக நம்பியவர்கள் தான் சத்திய சஹாபாக்கள்
இதற்கு ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் காணப்படுகிறது
அறிவை கொண்டும் அறிவியலை கொண்டும் மனித ஆற்றலால் இக்காலமும் கடுகளவு சாத்தியம் இல்லாத மிஃராஜ் பயணத்தை நபி ( ஸல் ) அவர்கள் கூறிய போது அதையும் கண்ணால் கண்ட உண்மையை போல் உடனடியாக ஏற்றவர்கள் சஹாபாக்கள்
-----------------
அறிவுக்கு எதிரான செய்தியும் சஹாபாக்களின்
ஈமானும்
3471 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள் பிறகு மக்களை நோக்கி, '(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார்
அப்போது அந்தப் பசுமாடு நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான் என்று கூறியது எனக் கூறினார்கள்
மக்கள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) பசுமாடு பேசுமா? என்று (வியந்து போய்க்) கூறினார்கள்
இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம் என்று கூறினார்கள்
அப்போது அங்கே அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இருக்கவில்லை
தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது
அந்த ஆட்டைத் தேடி ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார் உடனே அந்த ஓநாய் அவரைப் பார்த்து இன்னவரே இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய் ஆனால் கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்?
அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே' என்று கூறியது எனக் கூறினார்கள்
இதைக் கேட்ட மக்கள் 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா? என்று கேட்டார்கள்
நபி(ஸல்) அவர்கள் நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம் என்று கூறினார்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்புத் தொடரிலும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது
நூல் ஸஹீஹ் புகாரி
( ஹதீஸ் மறுப்பு கூட்டம் சிந்தனையை வைத்து மறுத்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இதுவும் ஒன்று )
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment