திருமறையை ஏற்பதே ஈமான்
திருமறையை ஏற்பதே
ஈமான்
♦♦♦♦♦♦♦♦♦
21- 07--19
கட்டுரை எண்1255
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
திருக்குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோன்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஈமான் என்றால்
குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவது போல் தோன்றும் வேறு சில குர்ஆன் வசனங்களையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படுமே அதற்க்காக அவைகளை புறக்கணிப்பதும் சரியாகி விடுமா ? அல்லது அதுவே சரியான ஈமானாகி விடுமா ?
உதாரணமாக
இணைவைத்தலை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதை போல் தோற்றமளிக்கும் நபிமார்கள் செய்ததாக இடம் பெறும் குர்ஆனிய ( முஃஜிசா) அதிசயங்களை சலனமில்லாது ஏற்பது ஈமானா அல்லது அவைகளை சிந்தனையை மட்டும் வைத்து மறுப்பது ஈமானா ?
உதாரணமாக சாலிஹ் ( அலை) அவர்கள் மூலம் பாறையில் இருந்து வெளிப்பட்ட ஒட்டக சம்பவத்தை பற்றி குறிப்பிடும் குர்ஆனின் 7:73,77 வசனங்கள்
மதுபானம் ஹராம் என்று சொல்லும் 5:90 திருகுர்ஆன் வசனத்தையும்
தொழுகை அல்லாத நேரங்களில் போதையோடு இருந்தால் குற்றம் இல்லை என்ற கருத்தை தரும் 4:43 வசனத்தையும் மோதவிட்டு குர்ஆன் வசனங்களை புறக்கணிப்பது ஈமானா ? அல்லது அதை பற்றிய சரியான புரிதலை ஹதீஸ் மூலம் தெரிந்து கொண்டு சலனம் இல்லாமல் அவைகளை ஏற்பது ஈமானா ?
திருக்குர்ஆன் என்பது நம் சிந்தனையை சீர்செய்வதற்க்கு தானே தவிர
நம் சிந்தனையை வைத்து திருக்குர்ஆன் எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்று முடிவு சொல்வதற்க்கு அல்ல என்பதை அறியாத மக்கள் திருக்குர்ஆனை ஏற்றும் நரகை சென்றடைவார்கள் என்பதே உண்மை
اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான்
(இறை) நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள் ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
(அல்குர்ஆன் : 2:26)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment