ஈமானை இழக்க வைக்கும் ஈமான்தாரிகள்
ஈமானை இழக்க வைக்கும்
ஈமான்தாரிகள்
♦♦♦♦♦♦♦♦♦
20-07--19
கட்டுரை எண்1254
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இஸ்லாத்தில் இணை வைத்தல் ( சிர்க் ) எனும் பாவமே பெரும் பாவம் என்பதில் மாற்று கருத்து இல்லை
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு என் அருமை மகனே
நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும் என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)
(அல்குர்ஆன் : 31:13)
இந்த வசனத்தை முன்னிருத்தி நாமாகவே நமது அறிவை வைத்து இணை வைத்தலுக்கு விளக்கம் கூறுவது இறை நிராகரிப்பாகும் என்பதை ஏகத்துவம் பேசும் பலர்கள் இன்றும் அறிந்து கொள்ளவில்லை
முடவனை குணமாக்குவது குருடனை பார்க்க வைப்பது இறந்து போன பறவையை பறக்க வைப்பது இறைவனுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம் என்பதும் அந்த ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நினைப்பதும் (சிர்க் ) இணைவைத்தல் எனும் பெரும்பாவம் என்பதில் மாற்று கருத்து இல்லை
ஆனால் இந்த காரியத்தை இறைவனின் அனுமதியோடு நபி ஈஸா ( அலை) அவர்கள் உலகில் வாழும் போதும் செய்து காட்டினார்கள் என்று குர்ஆன் வசனம் 3-49 கூறும் செய்தியை சலனமே இல்லாமல் ஏற்று கொள்வது தான் ஈமான் எனும் இறைநம்பிக்கை ஆகும்
அவ்வாறு நம்புவது இணை வைத்தல் என்ற பெரும் பாவம் அல்ல மாறாக அதை நம்ப மறுப்பது தான் குப்ரு என்ற இறை நிராகரிப்பாகும்
மழையை பொழிவது பூமியை செழிக்க செய்வது இறந்தவனை உயிர் கொடுத்து எழுப்புவது இறைவனின் தனிப்பட்ட அதிகாரமாகும்
ஆனால் இறுதி நாள் நெருங்கும் வேளையில் தஜ்ஜால் என்பவன் வருகை தரும் போது அவன்
வானுக்கு கட்டளை போடுவான் என்பதும் அப்போது வானம் மழையை பொழியும் என்பதும் ஒரு மனிதனை கொலை செய்து அதன் பின் இறந்து போன அந்த மனிதனை மீண்டும் உயிரோடு எழுப்புவான் என்று நபி( ஸல் ) அவர்களின் பொன் மொழியை சலனமே இல்லாது நம்புவதும் ஈமான் ஆகும் ( புகாரி 1882)
அது இணை வைத்தல் எனும் பெரும்பாவம் அல்ல
அதே போல் சூனியத்தை இஸ்லாம் கூறும் வரைமுறைகளை தாண்டி நம்புவதும் அதை கற்பதும் பிறருக்கு கற்று கொடுப்பதும் இஸ்லாம் தடுத்த இணை வைத்தல் எனும் பெரும்பாவமாகும்
அதே நேரம் சூனியத்தை பற்றி இடம் பெறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்பாடில்லாமல் விளங்குவதும் இஸ்லாம் சொல்லும் அளவு கோளின் படி அவைகளை சலனமே இல்லாமல் நம்புவது ஈமானாகும்
ஒட்டு மொத்தமாக அவைகளை மறுப்பதும் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் கூறிய ஆதாரப்பூர்வமான நபிமொழி கருத்துக்களை எல்லாம் எந்த வகையில் பலவீனமானது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்காமல் அவைகளை குர்ஆன் மற்றும் இன்னும் பிற ஹதீஸ்களோடு மோதவிட்டு புறம் தள்ளுவதும் ஈமானுக்கு எதிரான காரியமாகும்
சுருக்கமாக சொன்னால் இவைகளை எல்லாம் முறையாக நம்புபவர்களை முஸ்ரிக்குகளாக சித்தரிக்கும் சிந்தனை உடையவர்கள் தான் உண்மையில் குப்ரு என்ற நிராகரிப்பு கொள்கைக்கு உரித்தானவர்கள் என்பதை நேர்மையோடு சிந்தித்தால் மறுக்கவே இயலாது
உள்ளதை உள்ளமையோடு நம்புவது தான் இஸ்லாமிய நம்பிக்கையாகும்
எதற்கெடுத்தாலும் தர்கம் செய்து கொண்டு பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டு நம்மை நாமே நரக படுகுழியில் கொண்டு செல்லும் சாத்தானிய சூழ்ச்சிகளை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக ஆமீன்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment