பித்அத்களின் ஆதிக்கமே சுன்னத்துகளின் சாவுமணி

பித்அத்துகளின் ஆதிக்கமே

     சுன்னத்துகளின் சரிவு

      ♦♦♦♦♦♦♦♦♦♦

                17-07--19
         கட்டுரை எண்1253
      !!J . Yaseen iMthadhi !!
              **************
           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
      ★★★★★★★★★★★

முஸ்லிம்கள் இஸ்லாம் அனுமதித்த காரியங்களில் சிலவற்றை விரும்பிய நேரத்தில் விரும்பிய மாதத்தில் செய்ய முடியும்

உதாரணமாக தான தர்மம் நபில் தொழுகை திக்ருகள் போன்றவை

ஆனால் இஸ்லாம் கற்று தரும்  இன்னும் சில காரியங்களை  முஸ்லிம்கள் நினைத்த நேரத்தில் செய்யவும்  இயலாது செய்யவும் கூடாது

உதாரணமாக சூரிய கிரகண தொழுகை சந்திர கிரகண தொழுகை பெருநாள் தொழுகை போன்றவை

மார்க்கத்தில் ஆதாரமற்ற பராஅத் இரவு மிஃராஜ் இரவு மீலாது விழா போன்ற பித்அத்களை மார்க்க கடமை போல் கருதி வழிமுறை படுத்தும் பல முஸ்லிம் ஜமாத்துகள் நபி (ஸல்) அவர்களால் நெறிமுறை படுத்திய சூரிய சந்திர தொழுகை சந்திர கிரகண தொழுகையை அமுல் படுத்துவதிலே முக்கியதுவம் வழங்குவது இல்லை

நபிவழியை நடைமுறை படுத்துவதற்க்கு தான் முஸ்லிம் ஜமாத்துகளே தவிர பள்ளிவாசல்களே தவிர

நபிவழியில் இல்லாத பித்அத்துகளை வழிமுறை படுத்துவதற்க்கு அல்ல என்பதை முஸ்லிம் ஜமாத்துகள் அறிய வேண்டும்

இது போன்ற விசயங்களில் பொது மக்களும் கவனம் செலுத்துமாறு ஜமாத் நிர்வாகிகளை வலியுருத்த வேண்டும்

பித்அத்துகள் தலை தூக்கும் போது சுன்னத்துகள் அடிபட்டு விடும் என்பதற்க்கு அநேகமான சான்றுகள் முஸ்லிம் சமுதாயத்தில் இன்றும் உள்ளது

உதாரணமாக

1 ரமலானில் தொழ வேண்டிய  சுன்னத்தான எட்டு  ரக்அத் இரவு தொழுகையை தவற விட்டதின் காரணத்தால் பித்அத்தான இருபது ரக்அத் தொழுகை  தலைதூக்கி உள்ளது

2 பாங்கு சொல்லியதற்க்கு பின்பு ஓத வேண்டிய சுன்னத்தான சலவாத்தை தவற விட்டதின் காரணத்தால்
பாங்கும் சொல்லும் முன்பே முஅத்தின்  சலவாத் சொல்லும் பித்அத் தலை தூக்கி உள்ளது

3 திருக்குர்ஆனை அடிக்கடி ஓத வேண்டிய சுன்னத்தை தவறவிட்டதின் காரணத்தால் மவ்லீது சலவாத்துன்னாரியா போன்ற பித்அத் தலை தூக்கி உள்ளது

4 ஹதீசில் உள்ள திக்ரு போன்ற சுன்னத்துகளை தவற விட்டதின் காரணத்தால் பித்அத்தான குத்பிய்யத்துகளை பள்ளிவாசலில் வைத்தே  படிக்கும் அவல நிலை   தலை தூக்கி உள்ளது

5 மரணமானவர்களின் இல்லத்திற்க்கு தேவையான உணவுகளை  சமைத்து கொடுக்க வேண்டிய சுன்னத்தை தவற விட்டதின் காரணத்தால் மவுத் வீடுகளில் கூட விருந்து உண்ணும் பித்அத்தான அநாகரீகமான காரியம் தலை தூக்கி உள்ளது

6 பொது மண்ணறையை ஜியாரத் செய்யும் சுன்னத்தை தவற விட்டதின் காரணத்தால் இஸ்லாம் கண்டிக்க கூடிய தர்ஹாக்களில் சென்று மனிதர்களை இறைவன் போல் கருதி பிராத்திக்கும் சிர்க் எனும் பித்அத் தலை தூக்கி உள்ளது

இன்னும் இது போல் மார்க்க வரம்பு மீறல்கள் ஏராளம் நம் முஸ்லிம் சமூகத்தில்  உண்டு

சுருக்கமாக சொன்னால் சுன்னத்தான விசயங்களில் கவனம் செலுத்த தவறுவதே பித்அத்துகளின் முன்னேற்றத்திற்க்கு மூல காரணம்

  وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا َنَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌  وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏ 
மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும் எதை விட்டும் உங்களை தடுக்கின்றாரோ  அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்

மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்

    (அல்குர்ஆன் : 59:7)

     நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்