மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பின்னனி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்
பின்னனி
*********************
13 -07-19
கட்டுரை எண்1252
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
சிந்தனையே இறைவன் வழங்கிய பேரருள்
சிந்திக்க சொல்லும் இஸ்லாம் நம் சிந்தனைக்கும் ஒரு எல்லையை வகுத்து தந்துள்ளது
அந்த எல்லையை தாண்டி சிந்திப்பது நம்மை குழப்பத்திலும் இறை மறுப்பிலும் ஹதீஸ் மறுப்பிலும் தான் கொண்டு செல்லும்
விதியை சர்ச்சை செய்யாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கண்டித்ததற்க்கு கூட இது தான் அடிப்படை காரணம்
இந்த தாத்பிரீயத்தை மறந்ததின் விளைவே அல்லது நினைவூட்டாததின் விளைவே அல்லது மறக்கடிக்கப்பட்டதின் விளைவே ஹதீஸ் மறுப்பு கொள்கை எனும் முஃதஜிலா சிந்தனையாகும்
இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தால் ஏற்படும் நன்மைகளை சிந்திப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது
ஆனால் நாமாகவே சுயமாக சிந்தித்து ஒரு குற்றவியல் சட்டத்தை இஸ்லாத்தின் பெயரால் திணிப்பது தான் இஸ்லாம் கண்டிக்கும் வரம்பு மீறலாகும்
எவ்வாறு தொழுகையில் தக்பீர் கட்ட வேண்டும் தொழுக வேண்டும் என்பதை ஹதீஸ்களை படித்து தான் நாம் தொழ வேண்டுமே தவிர
நாமாக சுயமாக சிந்தித்து தொழுகையின் வடிவத்தை கண்டறிய முடியாது
இஸ்லாத்தின் போர்வையில் பகுத்தறிவை மையப்படுத்தி சில அறிஞர்கள் உணர்சி வசமாக பேசியதின் பின் விளைவே ஏகத்துவவாதிகளிடமும் ஹதீஸ் மறுப்பு கொள்கை படிப்படியாக நுழைந்து வருகிறது
பல நூற்றாண்டுகளுக்கு முன் பதிவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டிய முறையில் ஆய்வு செய்யாததின் விளைவாக தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட குர்ஆனுக்கு முரண்பட்டதாக அறிவுக்கு முரண்பட்டதாக தள்ளுபடி செய்யும் அவலம் தற்போது சாதாரணமாக அரங்கேறி வருகிறது
அதை ஏற்காத அல்லது அவர்களின் வாதத்தை கூட அறியாத மக்களை வழிகேடர்கள் என்றும் முஸ்ரிக்குகள் என்றும் முத்திரை குத்தும் வரம்பு மீறல்கள் தற்போது எல்லை மீறி செல்கிறது
1இறைவன் நமக்கு வழங்கிய அறிவுக்கும் அதன் மூலம் உருவான அறிவியலுக்கும் உட்படாத வானவர்கள் தொடர்பான ஹதீஸ்கள் கூட அறிவுக்கு ஒவ்வாமையாக உள்ளது என்று வாதித்து இனிமேல் மறுக்கப்படலாம்
2 மண்ணறை வாழ்கை நபிமார்கள் செய்த அற்புதங்கள் கூட இனிமேல் சர்ச்சையாக்கப்படலாம்
ஹதீஸ்களை பல ஆய்வுகளுக்கு பின் பதிவு செய்த வல்லுனர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகளை தவிர ஹதீஸ்கலை வல்லுனர்களே அங்கீகரித்த பல ஹதீஸ்களை ஹதீஸ்களே அல்ல என்று வாதிப்பது அறிவீனத்தின் உச்சமாகும்
ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களின் விளக்கங்களில் நமக்கு ஞானமில்லாத நிலையில் அதில் தலையிடாது இருப்பது தான் தன்னடக்கமே தவிர
நாமே விளக்கம் அறியாத ஒரு ஹதீசை தள்ளுபடி செய்யும் அதிகாரம் எவருக்கும் இல்லை
அதனால் தான் ளயீஃபான ஹதீஸ்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்களே விளக்கியிருந்தும் அது போன்ற ஹதீஸ்களையும் தள்ளுபடி செய்யாது அவர்களே அது போல் ஹதீஸ்களை மக்கள் மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஹதீஸ் கிதாபுகளில் முன் வைத்து சென்றுள்ளனர்
மார்க்கம் கடலை போன்றது நீச்சல் தெரிந்தவர் நீந்தலாம் அல்லது கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கலாம்
வீட்டில் கட்டப்பட்ட சேமிப்பு நீர் தொட்டி என்று நினைத்து கடலில் முன் எச்சரிக்கை இல்லாது கால் வைத்தால் அதனால் ஏற்படும் பாதிப்பை உயிர் இழப்பை அவர் தான் சந்திக்க நேரிடும்
நஊது பில்லாஹ்
இன்ஷா அல்லாஹ்
தொடரும்
இப்படிக்கு J . இம்தாதி
Comments
Post a Comment