பதவி மோகமே பாவங்களின் அச்சாணி
பதவி மோகமே பாவங்களின்
அச்சாணி
**********************
30 -06-19
கட்டுரை எண்1249
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியங்களில் முஸ்லிம்கள் தானாகவே விரும்ப கூடாத காரியமும் சில உண்டு
அதில் ஒன்று தான் பதவியை இதர பொருப்புகளை நாடுவது அதை பல விதங்களில் தேடுவது
தியாகத்தின் சிகரங்களாக வாழ்ந்த சஹாபாக்கள் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் காலத்தில் தலைமை பொருப்புகளை விரும்பியதும் இல்லை அவ்வாறு விரும்பிய சிலர்களுக்கு நபியவர்கள் பொருப்புகளை கொடுக்கவும் இல்லை
காரணம் உலகில் பதவி பொருப்புகளை விரும்புகின்ற மனிதன் அந்த பொருப்பின் புகழுக்காகவும் அதன் மூலம் அடையும் இலாபத்திற்காகவும் உழைப்பான தவிர மறுமை நன்மைக்காகவும் மக்களின் துயர் துடைப்பதற்காகவும் உழைப்பது என்பது மிகவும் அரிது
நம் சமூகத்தில் பல விதமான குழப்பங்கள் விரோதங்கள் பிளவுகள் அதிகமாகி கொண்டே செல்வதற்க்கு மூல காரணமும் பின்னனியும் இதுவாகத்தான் அமைந்திருக்கிறது
யாரோ சிலர்கள் அர்ப பதவியை பெறுவதற்காக நமது நேரத்தை உழைப்பை அவர்களுக்காக நாசமாக்கி கொள்ள கூடாது
காரணம் அதன் மூலமாக நமக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை
ஒரு குழுவின் மூலமாக அல்லது ஒரு அமைப்பின் மூலமாக அல்லது தனி நபர்களின் மூலமாக மக்கள் பலன்களை அடைந்து கொண்டுள்ளனர் என்ற சூழ்நிலையில் அதை சீர்கெடுக்கும் விதமாக அதிகார விரும்பிகளின் சூழ்சிகளுக்கு உட்படுவது நம்மை நாமே அழிவின் பக்கம் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகும்
சமூக சேவைகளை பொருப்புகளை பெறாமல் கூட நம்மால் இயன்றவரை மக்கள் சேவை செய்ய இயலும் என்ற நல்லெண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும்
ஒரு வேளை பொருப்புகளை பிறர்களின் வலியுருத்தலில் ஏற்று கொண்டால் கூட அந்த பொருப்புகளில் சிறிதளவும் கோணலாக நடந்தால் அதன் மூலமாகவே மறுமையில் நாம் நரகத்தை பெற்று விடுவோம் என்ற அச்சவுணர்வு அதிகாரங்களை பெற்றுள்ளோர் உணர வேண்டும்
عَنْ حُذَيْفَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ فَارَقَ الْجَمَاعَةَ وَاسْتَذَلَّ اْلإِمَارَةَ لَقِيَ اللهَ وَلاَ وَجْهَ لَهُ عِنْدَهُ
எவன் முஸ்லிம்களுடைய ஜமாஅத்தைவிட்டுப் பிரிந்து, தலைமைப் பதவியை கேவலமாகக் கருதினானோ, அவனுக்கு அல்லாஹுதஆலாவிடம் எந்த அந்தஸ்தும் இல்லாத நிலையில் (அல்லாஹுதஆலா அவனை கேவலமாகக் கருதிய நிலையில்) அல்லாஹுதஆலாவைச் சந்திப்பான் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்னத் அஹ்மத்
**********
2261.அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் சென்றோம் (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்) நான் நபி(ஸல்) அவர்களிடம்)
இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை
(முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!) என்று கூறினேன்
நபி(ஸல்) அவர்கள் பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம் என்று பதிலளித்தார்கள்
நூல் ஸஹீஹ் புகாரி
***************
7149. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்
நானும் என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்
(என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர் எங்களுக்குப் பதவி தாருங்கள் இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார் மற்றொருவரும் அவ்வாறே கேட்டார்
நபி(ஸல்) அவர்கள், கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (-பதவியை) வழங்கமாட்டோம்' என்றார்கள்
நூல் -ஸஹீஹ் புகாரி
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment