புரட்சியாளன்
!! புரட்சியாளன் !!
புரட்சியாளன் தோன்றுவது அரிது அவனை விமர்சிப்போரே பெரிது
இகழ்சியாளன் புரட்சியாளனை விமர்சித்தால் புரட்சியாளன் லட்சியத்தில் முன்னேற்றம் அடைகிறான்
வதைகளை சுமந்து
நல் விதைகளை முளைபிப்பவனே புரட்சியாளன்
கதைகளை காணாது செய்து தன் சரிதைகளையே சான்றாக மாற்றுவான் புரட்சியாளன்
தளர்சியை தவிடு பொடியாக்கி சமூக எழுச்சியை செதுக்குபவனே புரட்சியாளன்
எட்டாத முகடை பார்த்து கை கட்டி வேடிக்கை பார்ப்பவனால் வளர்சியை கனவு காண இயலாது
முட்டாத கோள்களிலும் தன் கால் சுவடுகளை பதிக்க எத்தனிக்கும் மாமனிதனே புரட்சியாளன்
புரட்சி எனும் சொல்லுக்கே புகழ்சியை தருபவனே புரட்சியாளன்
மெய்சிலிர்க்கும் ரோமக்கால்களை தன் சொல் வடிவால் மக்கள் உடலில் செதுக்குபவனே புரட்சியாளன்
ஆட்சியாளனையும் ஆட்டம் காண வைக்கும் புரட்சியாளனின் அர்ப வார்த்தைகள்
காட்சியாளனை கற்பனை பாத்திரத்தில் இருந்து மீட்சி அடைய வைக்கும் புரட்சியாளனின் சொல்லாடல்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment