ஞானமில்லா கல்விதுறையும் அவமானப்படும் ரஜினிகாந்தும்
கல்வி ஞானம் இல்லாத
கல்வி துறையும்
கேவலப்படும் ரஜினிகாந்தும்
**********************
13 -06-19
கட்டுரை எண்1248
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் பொது அறிவுக்கான ரேக்ஸ் டூ ரிச் ஸ்டோரீஸ் பகுதியில் சினிமா கூத்தாடி ரஜினியின் செய்தியை பள்ளி கூட மாணாக்களின் முன்னேற்ற சிந்தனைக்கு எடுத்து காட்டாக பதியப்பட்டுள்ளது
எந்த துறைக்கு முன்னோடியாக ஒருவரின் வரலாறை மேற்கோள் காட்டினாலும் அவர் அந்த துறையில் தேர்சி பெற்றவராக தனித்து விளங்கியவராக இருக்க வேண்டும்
மாணாக்களுக்கு முன்னோடியாக ஒருவரின் சரித்திரம் சொல்வதாக இருந்தால் அவர் படிப்பு துறையில் சிறந்தவராக தனித்து விளங்கியவராக வாழ்ந்து இருக்க வேண்டும்
சினிமா கூத்தாடி ரஜினிகாந்த் என்பவர் எந்த வகையில் பாடசாலைகளின் மாணாக்களுக்கு முன்னோடி ?
அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய பணிகள் என்ன ?
எத்தனை கல்லூரிகளில் மாணாக்களுக்கு சிந்தனை சொற்பொழிவை நிகழ்தி உள்ளார் ?
அரசாங்கத்தின் சார்பாக நடத்தப்படும் எத்தனை பாடசாலைகளுக்கு அவர் நிதியுதவி வழங்கியுள்ளார் ?
அல்லது பாடசாலைகளில் படிக்கும் மாணாக்கள் அவர்கள் படிக்கும் கல்வியை குப்பையில் வீசிவிட்டு வருங்காலத்தில் ஒழுக்க கேடுகளை கற்று தரும் சினிமா துறையில் இணைந்து அவர்களும் சீரழிந்து சமூகத்தையும் சீரழிக்க வேண்டும் என்பதற்க்கு இப்போதே நஞ்சை ஊட்டுகிறார்களா ?
இந்த பொருத்தமற்ற புகழ்சியை கேள்வி பட்டு திரு ரஜினிகாந்தே அதை வெறுத்திருக்க வேண்டும் ஊடகங்களில் கண்டித்து இருக்க வேண்டும்
சினிமாவில் ரசிகர்கள் மடத்தனமாக கை தட்டுவதை போலே இந்த செய்திக்கும் விசில் அடித்து கை தட்டுவார்கள் என்று எதிர் பார்த்தார் போலே
ரஜினியை போற்றுவதற்க்கு திணிக்கப்பட்ட இந்த செய்தியே அவரை நாட்டு மக்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்வதற்க்கு மூல காரணமாக மாறியுள்ளது
கற்பனை சினிமா மோகத்தின் அடிமைகளாக நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் அதிகம் இருப்பதால் தான் வரலாறு என்பதற்கே இலக்கணம் புரியாது நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகள் மக்களை
மூட சமுதாயமாக மாற்றி வருகின்றனர்
ஒழுக்க கேடுகளை கற்பிக்கும் சினிமா நடிகர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கும் அரசாங்கம்
படிப்பறிவை கற்று தரும் பள்ளி கூட பாட புத்தகத்தில் சினிமா நடிகர் நடிகைகளை முன்னோடிகளாக சித்தரித்து பாடத்தை உருவாக்குவது ஆச்சரியம் இல்லை
விசேஷ நாட்களிலும் சுதந்திர தின நாட்களிலும் இந்திய நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்கள் தியாகிகளை நினைவு கூற வேண்டிய ஊடகங்கள்
சுதந்தர தினத்தை முன்னிட்டு உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று விளம்பரம் செய்து குத்தாட்டங்களையும் கற்பனை சினிமாக்களையும் பல காலம் காட்டி வரும் நிலையை ரசித்து பழகிய குடிமக்கள் ரஜினி விவகாரத்தில் ஆத்திரப்படுவது என்பது நம்மை பொறுத்தவரை நகைப்பான ஒன்று தான்
வரலாறு என்பதற்க்கு என்ன இலக்கணம் என்றே தெரியாத மக்களுக்கு ரஜினி விவகாரம் சர்ச்சையாக தோன்றலாம்
ஆனால் வரலாற்றின் தன்மைகளை சரியாக புரிந்துள்ள முஸ்லிம் சமூகத்திற்க்கு எந்த வரலாறை மனித உள்ளத்தில் போட வேண்டும் எந்த வரலாறை குப்பையில் போட வேண்டும் என்பது தெளிவாகவே தெரியும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment