ஆளூர் ஷா நவாஸ்
இலங்கை குண்டு வெடிப்பு
!! கண்டனமும் !!
ஆளூர் ஷா நவாஸ் பேட்டியும்
**********************
02-05-19
கட்டுரை எண்1248
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
அரசியல் மற்றும் சமூக ரீதியாக சிறந்த கருத்துக்களை விவாதமாகவும் பேட்டியாகவும் கொடுத்து வரும் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு
இலங்கை குண்டு வெடிப்பை பற்றி சமீபத்தில் நீங்கள் அளித்த பேட்டி உங்களது சிந்தனையின் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நன்மதிப்பை சற்று குறைத்துள்ளது என்பது தான் உண்மை
உங்களிடம் இலங்கை குண்டு வெடிப்பை பற்றி பேட்டி எடுத்த ஊடக நண்பரே
முஸ்லிம்களை பற்றி பிறர்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டை பிரதிபலிக்கும் முகமாகவே உங்கள் கருத்து உள்ளது என்று நேரடியாக கூறும் அளவு தான் இவ்விசயத்தில் உங்கள் பேட்டி அமைந்திருந்தது
இலங்கை குண்டு வெடிப்பை உலகில் வாழும் ஒட்டு மொத்த இஸ்லாமிய அமைப்புகளும் சமுதாய தலைவர்களும் குறிப்பாக தவ்ஹீத் இயக்கங்களும் கடுமையாக கண்டித்திருக்கும் பொழுது தவ்ஹீத் இயக்கங்களின் முரட்டுதனமான பிரச்சாரத்தால் தான் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்ற தோரணையில் அமைந்த உங்கள் பேட்டி அவசியமற்றது
இலங்கை குண்டு வெடிப்பில் நேரடியாக சம்மந்தப்பட்ட ( NTJ ) சஹ்ரான் என்பவனே அவனது சிந்தனைக்கு யூத அமைப்பான ISIS இயக்கத்தை பின்னனியாக வீடியோ வடிவில் வெளிப்படுத்தி இருக்கும் போது சஹ்ரான் நிகழ்த்திய காட்டு மிராண்டித்தனமான செயலில் 25 வருடம் பல தியாகங்களை சமூக சேவைகளை செய்து வரும் தவ்ஹீத் சிந்தனையுடைய மக்களை சம்மந்தப்படுத்துவது போல் உங்கள் பேட்டி அமைந்திருந்தது கண்டிக்க தக்கது
நீங்கள் அப்பேட்டியில் குறிப்பிடும் கடும்போக்கு என்ற வாதம் ஏகத்துவவாதிகளில் சிலர்கள் முஸ்லிம் அமைப்புகளுக்கு மத்தியில் வெளிப்படுத்தி வரும் அறிவீன செயல்பாடு தானே தவிர முஸ்லிம் அல்லாத மக்களின் உயிர்களை பலி வாங்கும் சிந்தனையில் அமைந்தது அல்ல என்பதை நீங்கள் புரியவில்லை
மார்க்கத்தை வீரியமாக செயல் படுத்த வேண்டும் என்ற கொள்கை உறுதியை வெளிப்படுத்தும் இஸ்லாமிய இளைஞர்களின் நடவடிக்கைகளை குறிப்பாக வணக்கம் என்ற வார்த்தையை தவிர்ப்பதை குறையாக கூறுவது உங்களது மார்க்க அறியாமையும் பிடிப்பின்மையுமாகும்
அரசியல் புரியாமையே இன்றைய இஸ்லாமிய இளைஞர்களின் வழிகேடுகளுக்கு மூல காரணம் என்பதை குற்றச்சாட்டாக கூறும் உங்கள் கூற்றில் சில நியாயம் இருப்பது போல்
தற்கால அரிசியலை மட்டும் அடிப்படையாக புரிந்து வைத்திருப்பது தான் இவ்விசயத்தில் உங்கள் தவறான பேட்டிக்கும் அடிப்படை காரணமாகும்
முஸ்லிம் சமுதாயத்தின் பரம எதிரிகள் என்று அனைவராலும் அறியப்பட்ட அரசியல்வாதிகளோடு அரசியல் கூட்டங்களில் மனமே ஒன்றிணையாது கைகோர்த்து போஸ் கொடுத்து காட்சியளிப்பது தான் மதநல்லிணக்கம் என்று விளக்கம் சொல்வது உங்களது தனிப்பட்ட விருப்பமாக இருக்க முடியுமே தவிர
அதை மதநல்லிணக்க சான்றாக ஏற்க முடியாது
பிறர்களின் வழிபாடுகளை கலாச்சாரங்களை நெறி தவறி கடுமையாக விமர்சிப்பதும் அவைகளை வைத்தே நல்லுறவை கெடுப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்க்கு எதிரே தவிர
பிறர் கலாச்சாரத்தை நான் பின்பற்ற மாட்டேன் அவ்வாறு பின்பற்றுவது அறிவுப்பூர்வமாக இல்லை என்று அழகாக எடுத்து சொல்வது என்பது சமூக மதநல்லிணக்க பண்பாடுகளுக்கு எதிரானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் சேவை சிறக்க பிராத்தணைகளுடன்
நட்புடன் J . இம்தாதி
وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
மேலும் (முஸ்லிம்களே!) அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்
பிறகு அவர்கள் அறியாமையினால் எல்லைமீறி அல்லாஹ்வையே திட்ட ஆரம்பித்து விடுவார்கள்
நாம் இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவருடைய செயலை அழகாக்கியிருக்கின்றோம் பிறகு அவர்கள் தம் இறைவனிடமே திரும்பி வரவேண்டியதிருக்கிறது அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அவர்களுக்கு அவன் அறிவித்துவிடுவான்
(அல்குர்ஆன் : 6:108)
Comments
Post a Comment