உளவியல் உண்மைகள்
உளவியல் உண்மைகள்
♦♦♦♦♦♦♦♦♦♦
27-03--19
கட்டுரை எண்1241
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இது உண்மை
அது பொய்
இது இப்படித்தான் நடக்கும்
அது அப்படித்தான் நடக்கும்
இதன் எதார்த்தம் இது
அதன் எதார்த்தம் அது
இது நிலையானது
அது நிலையற்றது
இது தேவையானது
அது தேவையற்றது
என்ற தாத்பிரீயத்தை நடை முறை வாழ்க்கையோடு புரிந்து செயல் படுபவனுக்கு உளவியல் தாக்கம் லேசானதாக இருக்கும்
இதன் சாரத்தோடு இறைநம்பிக்கையும் அதன் அசல் வடிவத்தோடு தழுவி இருந்தால் உளவியல் தாக்கம் மெல்லிய அமைப்பில் இருக்கும்
உன் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது உணவின் சத்துக்களை விளக்கி கூறினால் அவன் ஆரோக்யத்தை முழுமையாக அடைவான்
அதே குழந்தைக்கு இல்லாத பூச்சாண்டியை இருப்பது போல் சித்தரித்து பயம் காட்டி உணவை ஊட்டினால் அவன் பிற்காலத்தில் மூடனாகவே கோழையாகவே மறுதலிப்பான்
பூனையை காட்டி இது போல் தான் காட்டு புலிகள் இருக்கும் என்று சொன்னால் நீ உன் குழந்தைக்கு தவறாக பாடம் நடத்துகிறாய்
அதே பூனையை காட்டி காட்டு புலிகளினின் ஜாடையை தான் இந்த பூனை பெற்றுள்ளது என்று நீ சொல்லி கொடுத்தால் சரியான பாடத்தை உன் குழந்தைக்கு நீ கற்று கொடுக்கிறாய்
உன்னுடைய வடிவாக்கமே உன் வாரிசுகளின் எதிர்காலம்
இதை மையமாக வைத்தே இஸ்லாம் நமக்கு வாழ்கை பாடத்தை தெளிவாக கற்பிக்கிறது
நல்லவனாக நீ நடப்பதால் தீங்கே உன்னை தீண்டாது என்று இஸ்லாம் போலியாக உனக்கு பாடம் நடத்தவில்லை
அண்ணண் என்ற சொல்லை பயன் படுத்தி கொண்டு அந்நியர்களை அண்ணண் போன்றே பாவிப்பது பெண்மைக்கு ஆபத்து என்றே இஸ்லாம் சொல்வதும் உண்மையை தெளிவாக புரிய வைப்பதற்க்கு தான்
உள்ளத்தை உண்மைகளை கொண்டு நீ மூடினால் அந்த உள்ளம் உனக்கு பாதுகாப்பை தரும்
அதே உள்ளத்தை பொய்களை கொண்டு நீ மூடினால் அந்த உள்ளம் உளவியல் நோயின் கூடாரமாகவே மாறும்
اِنَّمَا يَفْتَرِى الْـكَذِبَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்
இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்
(அல்குர்ஆன் : 16:105)
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்
நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 16:116)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment