இழிவுகளின் வாசல்

         இழிவுகளின் வாசல்

   ♦♦♦♦♦♦♦♦♦♦

                    19-03--19
           கட்டுரை எண்1240
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

உன்னை விட நான் பலசாலி
உன்னை விட நான் புத்திசாலி
உன்னை விட நான் தந்திரசாலி

என்று ஒரு மனிதனால் கூற இயலுமே தவிர

என்னை விட யாரும் எவ்விதத்திலும் மேலானவர்கள் அல்ல என்று எப்போது ஒரு மனிதன் முடிவு செய்கிறானோ அப்போதே அவன் தனது அறிவை மழுங்க செய்ய துவங்குகிறான் 

இதனால் அவனது வாழ்விலே தோல்விகளும் ஏமாற்றங்களும் இழிவுகளும் இழப்புகளும் சாதாரணமாக ஏற்பட துவங்குகிறது 

தன்னை விட மேலானவர்களை மதிப்பதும் அவர்களின் அறவுரைகளை செவியுருவதும் அடிபணிவதும் நேர்மையான எச்சரிக்கைகளை கண்டு அஞ்சுவதும் அவமரியாதை அல்ல

وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ وَلَبِئْسَ الْمِهَادُ‏ 

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது

அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்

      (அல்குர்ஆன் : 2:206)

وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌  اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏ 

மேலும், பூமியில் செருக்காக நடக்காதீர்கள் ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது
மலையளவுக்கு உயர்ந்துவிடவும் முடியாது

      (அல்குர்ஆன் : 17:37)

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்