சீரழியும் பெண்களும் சூழல்களும்

         சீரழியும் பெண்களும்

        சீரழிக்கும் சூழல்களும்

   ♦♦♦♦♦♦♦♦♦♦

                    17-03--19
           கட்டுரை எண்1239
         !!J . Yaseen iMthadhi !!
                **************

                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

பொள்ளாச்சி விவகாரத்தில் பல பெண்கள் ஆண் காமுகர்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற செய்தி  பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது

பொதுவாக இது போல் விவகாரத்தில் ஆண்களை மாத்திரமே  குற்றவாளியாக சித்தரிக்கும் மனோநிலை பரவலாக உள்ளது

அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தன்மையை  பெண்கள் புறக்கணித்ததின் விளைவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேற்றய அடைந்து வருவதற்க்கு மூல காரணம்

இது போன்ற விவகாரங்களில் சிக்கி தவிக்கும் எந்த பெண்ணையும் ஆண்கள் வலுக்கட்டாயமாக கடத்தி  சென்று நாசமாக்கினார்கள் என்ற தகவல் மிகவும் குறைவு

காதல் பெயரால்
நட்பின் பெயரால்
நட்புக்கு உதவுகிறோம் எனும் பெயரால்
இதில் சிக்கியவர்களும் தந்திரம் செய்தவர்களும் தான் இந்நிலையை அடைந்து வருகின்றனர்

குறிப்பாக கல்லூரிகளில் பயிலும் மாணாக்கள் இவ்வாறு இருப்பது அவர்கள் படிக்க சென்றாலும் பகுத்தறிவை முறையாக  பயன் படுத்த தெரியாதவர்கள் என்பதே நிரூபணம் ஆகி வருகிறது

அதே போல் திருமணமான குடும்ப பெண்களிடம் தந்திரமாக தொடர்பு ஏற்படுத்தி கொண்டு  அவர்களின் மணவாழ்வை நாசமாக்கி வரும் கழிசடைகளும் பிளாக்மெய்ல் செய்து வரும் பண அடிமைகளும்  தற்போது பெருகி விட்டனர்

சமூகவலைதளத்தின்  சுதந்திரமும் கணவன்மார்களின் கவனிப்பற்ற தன்மைகளும் தான் இதற்க்கு மூல காரணம்

இஸ்லாத்தின்  பெயரை பயன் படுத்தி கொண்டு இது போல் ஒழுக்க கேடுகளில் வரம்பு மீறல்களில்  ஈடுபட்டு வரும் நபர்களையும் சமீபகாலமாக அதிகமாக காண முடிகிறது

ஒரு ஆண் எப்போதும் அவன் ஆண் என்ற தன்மையோடு தான்  இருப்பான் என்ற உணர்வை பெறாத பெண்களும் 

ஒரு பெண் எப்போதும் அவள் ஆண்களின் வக்கிரபுத்திக்கு  அடிமையாகத்தான் மாற்றாப்படுவாள் என்ற உணர்வை பெறாத குடும்பத்தார்களும் இந்த அவல நிலையை வாழ்நாளில் சந்தித்தே தீருவார்கள்

தவறுகளில் ஈடுபட கூடாது என்று மனதளவில் முடிவு செய்வதோடு அதற்கான சூழல்களில் சிக்கி விட கூடாது என்ற முன்னெச்சரிக்கையே தற்காலத்தில் மிகவும் அவசியம்

இனியாவது திருந்துவார்களா ? அல்லது மீண்டும் இதே போல்  வருந்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ்

فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்

நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்

       (அல்குர்ஆன் : 5:39)

       நட்புடன்  J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்