நரகை பெற்று தரும் பிள்ளைகள்


          நரகை பெற்று தரும்

               பிள்ளைகள்

   ♦♦♦♦♦♦♦♦♦♦

                    14-03--19
           கட்டுரை எண்1238
         !!J . Yaseen iMthadhi !!
                **************

                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

தவறான காரியத்தை காணும் போது அதை வெறுக்கும் விதமாகவே இறைவன் மனிதனின் மனோநிலையை அமைத்துள்ளான்

இது இறைவன் மனித சமூகத்திற்க்கு செய்த மிகப்பெரிய பாக்கியம்

ஒரு தவறை துவக்கத்தில் செய்யும் போது மனிதனின் மனம் அதை வெறுத்த நிலையில் தான் செய்ய துவங்கி இருக்கும்

அவனது  மனசாட்சியே அந்நேரம்  அவன் போகும் பாதையை தவறு என்று  தடுத்திருக்கும்

அந்த மன உறுத்தலையும் மீறி அந்த தவறை செய்ய துணியும் போது தான் அந்த பாவமான  காரியம் மனிதனிடம்  சர்வ சாதாரணமாக ஊடுருவி விடுகிறது

குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் திட்டமிட்டு ஒரு தவறை செய்யாது இருந்தாலும் அவர்களின் கண்கள் எதை சாதாரணமாக காணும் வாய்ப்பை பெறுகிறதோ

அல்லது எந்த தவறான பேச்சை சாதாரணமாக அவர்களின் செவிகள் கேட்கிறகிறதோ
அந்த செயலை நாமும் செய்தால் என்ன ? என்ற மனோநிலைக்கு இயல்பிலேயே  தள்ளப்படுவார்கள்

தற்போது சினிமாக்களும் வீடுகளில் அம்மோவோடும் குடும்பத்தோடு காணும் சீரியல்களின் தாக்கங்களும் தான் குழந்தைகளின் மனோநிலையை முற்றிலும் சீரழித்து விடுகிறது

அதற்க்கு சரியான சாட்சியாக கீழ்காணும் வீடியோவின் அவல நிலை  அமைந்துள்ளது

கால்நடைகளும் மிருகங்களும் பறவை இனங்களும்  தனது சந்ததிகளின் விசயத்தில் காட்டும் அக்கரையில் கால் அளவுக்கு கூட பெற்றோர்கள் தங்களது சந்ததிகளின் விசயத்தில் காட்டுவது இல்லை என்பது உண்மையாகி விட்டது

பெற்றோர்கள் மறுமையில் நரகத்திற்க்கு செல்வதற்க்கு அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளே  மூல காரணமாக அமைந்து விடும்

அது போன்ற நிலையை தவிர்ப்பதற்க்கு இப்போதே விழிப்புணர்வு பெறுவோம்

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَتْ لَهُ اُنْثَي فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ يَعْنِي الذَّكَرَ عَلَيْهَا اَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ

எவருக்குப் பெண் குழந்தை பிறந்து அவர் அதை (அறியாமைக் காலத்தில் செய்தது போல்) உயிருடன் புதைக்காமல், அதை இழிவாகக் கருதாமல் (அவர்களுடன் பழகுவதில்) பெண் பிள்ளையைவிட ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை தராமல், (மகனுடன் நடந்து கொள்வது போலவே மகளுடனும்) நடந்தார் என்றால், மகளுடன் நடந்து கொண்ட முறைக்குப் பிரதிபலனாக அல்லாஹுதஆலா அவரைச் சுவர்க்கத்தில் நுழைய வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

            நூல் முஸ்தத்ரக்

عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، اَلْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள் உங்களில் ஒவ்வொருவரிடமும் (அவருக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி) விசாரிக்கப்படும், அரசன் பொறுப்பாளன், அவரிடம் அவரது குடிமக்களைப்பற்றி விசாரிக்கப்படும். குடும்பத் தலைவன் தனது வீட்டாருக்குப் பொறுப்பாளன், அவரிடம் அவரது வீட்டாரைப்பற்றி விசாரிக்கப்படும்

பெண் தன் கணவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாளி அவளிடம் அவ்வீட்டில் வசிக்கின்ற குழந்தைகள் போன்றோரைப் பற்றி விசாரிக்கப்படும்

வேலைக்காரர் அவரது முதலாளியுடைய பொருளுக்குப் பொறுப்பாளர், அவரிடம் அவருடைய முதலாளியின் உடமைகள் செல்வங்களைப் பற்றி விசாரிக்கப்படும், மகன் அவனுடைய தந்தையுடைய பொருளுக்குப் பொறுப்பாளன் அவனிடம் அவனது தந்தையுடைய பொருளைப்பற்றி விசாரிக்கப்படும்

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், ஒவ்வொருவரிடமும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் பற்றி விசாரிக்கப்படும்  என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)  அவர்கள் அறிவித்துள்ளார்கள்

                நூல்  புகாரி

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்