முகநூலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களின் அவலம்
முகநூலில் அங்கம் வகிக்கும்
முஸ்லிம்களின் அவலம்
♦♦♦♦♦♦♦♦♦♦
09-02--19
கட்டுரை எண்1233
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
முகநூலில் போடப்படும் கருத்துக்களின் தராதரத்தை வைத்தே அந்த முகநூல் தரம் வாய்ந்ததா ?
அல்லது திரம் கெட்டதா என்பதை எடை போட இயலும்
1- புரைபைலில் சரியான அறிமுகத்தை போட்டு கொண்டு அந்த முகநூலில் போடப்படும் தகவல்கள் அருவருப்பானதாக பிறர்களை வசைபாடுவதாக அல்லது தனிமனிதர்களை துதி பாடுவதாக அல்லது தூற்றி கூறுவதாக இருந்தாலும் அதுவும் தரம் கெட்ட முகநூல்கள் தான்
2- யாருடைய முகநூல் என்றே தெரியாத நிலையில் அந்த முகநூலில் போடப்படும் தகவல்கள் போலியானதாக பிறர்களை வசைபாடுவதாக இருந்தாலும் அந்த முகநூல்களும் தரம் கெட்ட முகநூல்கள் தான்
குறிப்பாக இதில் 2 ம் வகையில் இருக்கும் முஸ்லிம்களின் பெரும்பாலான முகநூல்கள் இனகவர்ச்சி அடிமைகளின் முகநூல்களாக இயக்க பித்து பிடித்தவர்களின் முகநூல்களாக
இருப்பதை சாதாரணமாக காண முடிகிறது
கள்ளப்பெயரில் அல்லது அடையாளம் தெரியாத பெயரில் இருந்தால் நம் கருத்துக்களை கண்டித்து யாரும் நம்மிடம் நேரடியாக வர முடியாது என்ற குருட்டு நம்பிக்கையும் கோழைத்தனமும் தான் இதற்க்கு மூல காரணம்
குறிப்பாக தவ்ஹீத்வாதிகள் என்று தங்களை சொல்லி கொண்டு அல்லது நடுநிலையாளர்கள் என்று தங்களை ஒரு புறம் காட்டி கொண்டு இது போன்ற நிலையில் தங்களை ஈடுபடுத்தி வரும் கழிவுகளை சர்வ சாதாரணமாக காண முடிகிறது
ஒரு நேரத்தில் ஓரணியில் இருந்தவர்கள் தங்களுக்குள் பூசல்கள் ஏற்பட்ட பின் கள்ள அய்டிகளில் வலம் வருவதாக மாறி மாறி குற்றம் சுமத்துவதில் இருந்து இரு சாராரும் ஒரே நிலையில் உள்ள திருடர்கள் தான் என்பதை அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களே பட்டவர்த்தமாய் வெளிப்பட்டு விட்டது
சுருக்கமாக சொல்வதாக இருந்தால் நம் சமூகத்தில் பிளவுகளும் பூசல்களும் நீடித்து வருவதற்க்கு முகநூலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே மூல காரணம் என்பதை தெளிவாக காட்டுகிறது
நல்ல கருத்துக்களை பரிமாற்றம் செய்வதற்க்கு இலகுவாக முகநூல் எனும் வலைதளம் இருந்த போதிலும் அதை கூட சரியாக பயன்படுத்த தெரியாத அறிவிலிகளே இவர்கள்
நல்ல வேளை இது போன்றோர் கரங்களில் ஏக இறைவன் அதிகாரம் தந்திருந்தால் மாறி மாறி இவர்களே தூக்கு தண்டனை கொடுத்து மாண்டு போய் இருப்பார்கள்
அவ்வகையில் இறைவனுக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும்
கட்சிகளை சினிமா ரசிகர்களை காவிகளை எல்லாம் ஒரு புறம் குறைகளை பேசி கொண்டு அவர்களை விட கேடு கெட்டவர்களாக இவர்கள் நடப்பது தான் வேதனையாக உள்ளது
தங்களுக்கு தெரிந்த இஸ்லாத்தை எடுத்து சொல்லி அர்ப்பமான நன்மைகளை பெற்று அந்த நன்மைகளை அடுத்த விநாடியே நாசமாக்கி வரும் அஞ்ஞான மக்களும் இவர்கள் தான்
அஞ்ஞான அறிஞர்களும் இவர்கள் தான்
மிகவும் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் சமூகவலைதளங்கள் மூலம் நரகத்திற்க்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து வரும் வழிகேடர்களே இவர்கள்
عَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّؓ صَاحِبِ رَسُوْلِ اللهِ ﷺ يَقُوْلُ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ مَا يَظُنُّ اَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللهُ لَهُ بِهَا رِضْوَانَهُ اِلي يَوْمِ يَلْقَاهُ، وَاِنَّ اَحَدَكُمْ لَيَتَكَلَّمُ باِلْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ مَا يَظُنُّ اَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللهُ عَلَيْهِ بِهَا سَخَطَهُ اِلي يَوْمِ يَلْقَاهُ
உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவை திருப்திப்படுத்துகின்ற ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறார் அவர் அதை மிகப் பெரிதாகக் கருதுவதில்லை
அந்த வார்த்தையின் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாள் வரை அவரை திருப்தியுற முடிவெடுத்துவிடுகிறான்
மேலும், உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவுக்கு வெறுப்பை உண்டாக்கும் ஒரு பேச்சைப் பேசிவிடுகிறார், அதை அவர் மிகப் பெரிதாக எண்ணுவதில்லை
அந்தப் பேச்சின் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாள் வரை அவரை வெறுத்திட முடிவெடுத்துவிடுகிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் பிலால்இப்னு ஹாரிஸ் முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment