கஸ்தூரி மானும் நபிகளாரும்

    
      இறைவனின் படைப்பில்           கஸ்தூரி மானும் நபிகளாரும்

           *******************
  ♦♦♦♦♦♦♦♦♦♦

                    06-02--19
           கட்டுரை எண்1232          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

உயிரோட்டம்  உள்ள மனிதனாக இருந்தாலும் சரி
அல்லது  எந்த ஒரு உயிரினமானாலும் சரி அதன்  உடலின் உள் அமைப்பில் இருந்து வெளியேறும் வாடை நுகர்வதற்க்கு  சலிப்பு தரும் வாடையாக அல்லது நுகரும் போது  துர்வாடையாகவே அமைந்திருக்கும்

உடலின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து வைத்திருந்தாலும் மிக விரைவில் அது துர்வாடை தரும் பொருளாக மாறிவிடும்

இரத்த நாளங்கள் உயிருள்ள உடலமைப்பில் இறைவனால் அமைக்கப்பட்டு இருப்பதாலும் கழிவுகள் உடலின் உள் அமைப்பில் தேங்குவதாலும் இந்நிலை ஏற்படுகிறது

இந்த இயல்பு நிலைக்கு மாற்றமாக இறைவனால் படைக்கப்பட்டுள்ள உயிரினம் தான் கஸ்தூரி மான்

கஸ்தூரி மானின் வயிற்றின் அடிப் பாகத்தில் தனிச் சிறப்புடைய பை போன்ற ஒரு  உறுப்பு உள்ளது

அந்த பையில் வாசனை நீர்ப் பொருள் சுரக்கும் சுரப்பிகளை  இறைவன் இயல்புக்கு மாற்றமாக ஏற்படுத்தியுள்ளான்

அதுவே நறுமணம் கமழும்  கஸ்தூரி எனும் திரவமாகும்

இந்த நறுமணம் சுரப்பதால் தான் அந்த மான்  கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றுள்ளது

கஸ்தூரி சுரக்கும் அப்பை பார்ப்பதற்க்கு கவர்ச்சியாக தோற்றம் தராவிட்டாலும்  அந்த பையை அதற்க்குரிய வழிமுறைகளோடு  வெளியில் எடுத்து வைத்தால் கிட்டதட்ட ஐம்பது வருடங்கள் அந்த பையில் இருந்து கஸ்தூரி மனம் வீசும்

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஆண் இனத்தை சார்ந்த கஸ்தூரி மான்களுக்கு மட்டுமே இந்த மணம் சுரக்கும் விஷேச பையை இறைவன் அமைத்துள்ளான் பெண் இனம் சார்ந்த மான்களுக்கு இந்த மணம் இல்லை

இதன் மூலமாக தான்  விலை உயர்ந்த நறுமண பொருள்கள் தயாரிக்கப்படுகிறது

          ********************
இஸ்லாமிய பார்வையில் இறைதூதர்களில் ஒருவரான வியர்வை அதிகமாக சுரக்கும்  நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் உடலில்
இதே கஸ்தூரி மணத்தை இறைவன் தனிச்சிறப்பாக வழங்கி இருந்தான் என்பதற்க்கு ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளது

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் உடலில் கஸ்தூரி  நறுமணம் வீசியதாக அவர்களின் உற்ற தோழர்   அபூபக்கர் (சித்தீக்) அவர்களின் கூற்று ஆதாரமாக  அமைந்துள்ளது

           ******************

3553. (என் தந்தை) அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்
அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்

மக்கள் அப்போது எழுந்து நபி(ஸல்) அவர்களின் இரண்டு கரங்களைப் பிடித்து அவற்றால் தங்கள் முகங்களை வருடிக் கொள்ளலாயினர்
நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக் கொண்டேன்
அது பனிக் கட்டியை விடவும் குளிர்ச்சியானதாகவும் கஸ்தூரியை விடவும் நறுமணம் மிக்கதாகவும் இருந்தது

             ஸஹீஹ் புகாரி
                    *******

3667. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்

அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு

தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்

நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள்

இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள்

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யவில்லை  என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்

(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்

            ஹதீஸ் சுருக்கம்
             ஸஹீஹ் புகாரி

        நட்புடன் J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்