ஈமான்தாரிகளின் முதல் டாக்டர் கருஞ்சீரகம்

     ஈமான்தாரிகளின் முதல்

         டாக்டர்  கருஞ்சீரகம்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

                    21-02--19
           கட்டுரை எண்1237
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

நோய்களின் தாக்கம் இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவு பல விதங்களில் நோய்கள் இன்று மனித சமூகத்தை தாக்கி வருகிறது

உழைக்கும் பணத்தில் மருத்துவம் பார்க்கவே பாதி பணம் கரைகிறது என்ற புலம்பல்கள்  இன்று நோயாளிகளிடம்  அதிகரித்து விட்டது

இந்த சூழலில் மருத்துவத்தின் பெயராலும் மருந்துகளின் பெயராலும் பல ஏமாற்று வேலைகள் நோயாளிகளை  பாடாய் படுத்துகிறது

எந்த நோய்க்கு எதை சாப்பிட வேண்டும் ? எதை சாப்பிட கூடாது ? என்கின்ற விசயத்தில் கூட மருத்துவர்களிடம் பல முரண்பட்ட தகவல்கள் நோயாளிகளை மேலும் குழம்ப செய்கிறது

இந்த சூழலில் நோயாளியாக இருந்தாலும் நோய் தாக்காதவர்களாக இருந்தாலும் அவர்கள் அன்றாடம் பயன் படுத்த வேண்டிய இயற்கையான ஒரு மருத்துவ பொருள் மலிவாக கிடைக்கும்  கருஞ்சீரகம் ஆகும்

வாயில் போட்டு மெல்லும் போது ருசி அற்றதாகவும்  கசப்பு தன்மை கொண்டதாகவும் கருஞ்சீரகம் இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் மருத்துவ குணம்  மகத்தானது  எண்ணற்றது

மரணத்தை தவிர அனைத்துக்கும் நிவாரணம் உண்டு என்று நபி ( ஸல்) அவர்களால் இறை செய்தியாக சொல்லப்பட்ட ஒரே இயற்கை பொருள் கருஞ்சீரகம் ஆகும்

ஈமானிய நம்பிக்கையோடும் பிராத்தணையோடும்  இதை உண்ணும் போது நிச்சயம் கருஞ்சீரகத்தில்  அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் கிடைத்தே தீரும் என்பதை ஆணித்தரமாக நம்புங்கள் 

மருத்துவர் தரும் வாக்குறுதியை விட மகத்தான இறைவனின் தூதர் தரும் வாக்குறுதியே நிறைவேற கூடியது அறிவியல் கூற்றுக்களால் நிரூபணம் ஆக்கப்பட்டது

1 வாயில் போட்டும் மெல்லலாம்

2 நீரில் ஊற வைத்தும் அருந்தலாம்

3 கன்ஜியில் கலந்தும் சமைக்கலாம்

இதை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதை நோயாளியே தீர்மானிக்கலாம்

               **************

5687.5688  காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம்

வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள் அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம்

ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்

இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள்

இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள்
ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும் 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன் என தெரிவித்தார்கள்

நான் சாம் என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்

        நூல்  ஸஹீஹ் புகாரி
                      ********
         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்