காதலர் தினம்

ஆடவனை குற்றவாளியாக்கும்
         காமுகிகளின் காதலர்
                       தினம்
     ♦♦♦♦♦♦♦♦♦♦

                    14-02--19
           கட்டுரை எண்1236
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

          காதலர் தினத்தை

      கற்பு கொள்ளயர் தினம்

என்று  குறிப்பிடுவதின் மூலம் ஏதோ ஆடவர்கள் கட்டுப்பாடாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒழுக்கமுள்ள பெண்களின் கற்பை சூறையாடுவதை போல் ஒரு பிரம்மையை  திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்

சிந்தனைக்கு உரம் போடும் இஸ்லாத்தை ஏற்றவர்களும் இது போல் அறிக்கையை அடிக்கடி வெளியிடுவதை பார்க்கிறோம்

கற்பு கொள்ளை என்றால் ஒரு பெண் அவள் விரும்பாத விதத்தில் வலுக்கட்டாயமாக அவளது பெண்மையை அடைவதற்க்கு தான் கற்பு கொள்ளை என்று  சொல்ல வேண்டும்

தற்காலத்தில் காதலர் தினம் என்பது அவ்வகையில் இல்லை

நாணத்திற்க்கு எடுத்து காட்டாக வாழ வேண்டிய பெண்களே பெற்றோருக்கும் உற்றாருக்கும் தெரியாமல் அந்நிய ஆடவர்களுடன் கைகோர்த்து பார்க் பீச் என்று கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் அவலம் தான் நடை பெற்று வருகிறது

இவ்வாறு நடக்கும் பெண்கள் அவர்கள் விரும்பியே கள்ளத்தனமான உறவுகள் ஏற்படுகிறது

இதை கற்பு கொள்ளையர் தினம் என்று கூறுவது ஆடவர்களை மாத்திரம் இவ்விசயத்தில் குற்றவாளியாக சித்தரிக்கும்  தந்திரமாகும்

ஒழுக்கம் கெட்ட காரியங்களில் ஆடவர்களின் பங்கு முப்பது சதவிகிதம் என்றால் அதில் எழுபது சதவிகிதம் பெண்களின் பங்கீடு தான் உள்ளது என்பதை சிந்திப்போர் மறுக்க இயலாது

ஆடைகளில் அலங்கோலத்தை தேர்வு செய்து பொது இடங்களில் கேவலமாக  சுற்றுங்கள் என்று எந்த ஆடவனும் பெண்களுக்கு உத்தரவிட்டு நடப்பது இல்லை

ஆபாச காட்சிகளில் நடித்து பணத்தை ஈட்டுங்கள் என்று எந்த ஆடவனும் பெண்களுக்கு உத்தரவு போடுவது இல்லை

பெற்றோர்களின்  காதுகளில் பூவை சுற்றி விட்டு எங்களோடு தனிமையில் ஓடி வாருங்கள் என்று எந்த ஆடவனும் பெண்களுக்கு நிர்பந்தம் ஏற்படுத்துவது இல்லை

இவையாவுமே ஒரு பெண்ண விரும்பி தேர்வு செய்வது தான்

இதில் ஆடவன் முதல் குற்றவாளியா    ?

அல்லது பெண்ணே அடிப்படை குற்றவாளியா  ?

விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் எனும் பெயரில் காதலர் தினத்தில் ஆடவனை மாத்திரம் குற்றவாளி கூண்டில் ஏற்றுவது வடிகட்டிய பொய்யாகும்

இது ஆடவர்களை தூய்மை படுத்துவதற்க்கு எழுதப்பட்ட ஆக்கம் அல்ல

மாறாக ஆடவனை மாத்திரமே குற்றவாளி கூண்டில் தள்ளுவது மாதர் சங்கங்கள் ஏற்படத்தும் சதி என்பதை விளக்கி கூறவே இந்த பதிவு 

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏ 

நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்

நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்

      (அல்குர்ஆன் : 2:208)


      நட்புடன்  J  .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்